சரித்திரத்திலிருந்து அவரை வெளியேயெடுத்துயர்த்துதல் 58-1001 1.சகோதரன் நெவில் உங்களுக்கு நன்றி. மாலை வணக்கம். நண்பர்களே! இது உண்மையாகவே ஒரு…இன்றிரவு மீண்டுமாக ஐந்து இரவுகளுக்கான தொடர் கூட்டங்களைத் துவங்கும்படியாக இங்கே கூடாரத்தில் இருப்பதை நான் ஒரு மகத்தான சிலாக்கியமாகவே கருதுகிறேன். நான் இங்கே கூடாரத்தில் ஓர் எழுப்புதலைக் கொண்டிருந்தது முதற்கொண்டே சில நேரத்தில் இது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நாங்கள் இதை ஒருபோதும் செய்தித்தாள்களிலோ அல்லது வேறெதோ ஒன்றிலோ அறிவிக்கவேயில்லை. ஆகையால் ஜனங்களை அமர்த்துவதற்கு போதிய இடவசதியை நாங்கள் கொண்டிருக்க மாட்டோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், ஏனென்றால் இது சிறியதாயும், நம்முடைய இருக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுள்ளதாயுமிருக்கிறது. ஆனாலும் நாங்கள் எல்லோருக்குமே எங்களால் முடிந்தளவு இடவசதியமைத்துக் கொடுப்போம். எனவே நாங்கள் இங்கே உள்ள உயர்நிலைப் பள்ளியின் உடற்பயிற்சிக் கூடத்தை வாடகைக்கு எடுக்கப்போவதாக இருந்தோம். அப்பொழுது எங்களால் அதை விளம்பரப்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால் இப்பொழுது இது பள்ளி நடைபெறும் நேரமாய் உள்ளது, எனவே அதை எடுத்துப் பயன்படுத்த இயலாததாயுள்ளது. 2 நான் என்னுடைய ஊழியங்களுக்காக கடல்கடந்து செல்ல வேண்டியிருப்பதால், நான் வெகு சீக்கிரத்தில் புறப்பட்டுச் செல்வேன் என்றே எண்ணுகிறேன். நான் மீண்டுமாய் அங்கு கடந்து செல்வதற்கு முன்பு, சபையோர் எல்லாரோடும் சேர்ந்து வந்து ஒரு சிறு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். 3 நாம் அடிக்கடி சந்திக்கிறோம் என்பதையும், நாம் கடைசி முறையாக ஒரு முறை சந்திக்கப் போகிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆகையால் நாம்—நாம் அவருடைய வார்த்தையானது நாளுக்கு நாள், நாளுக்கு நாள் திரை நீக்கப்படுவதைக் காண்கையில், நாம் கர்த்தரோடும், அவருடைய வார்த்தையோடும் நம்மால் முடிந்தளவு நெருக்கமாகயிருந்து சரிபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். எனவே நமக்கு இங்கு ஒரு—ஒரு சிறுக்கூட்டம் இருக்குமேயானால், அது அருமையாயிருக்கும் என்றும், அப்பொழுது நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம் என்றும் நான் எண்ணினேன். 4 இது கொஞ்சங் காலத்திற்கு முன்னர் கர்த்தர் எனக்கு அளித்த ஒரு தரிசனத்தின் மூலம் எனக்குக் கூறப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் அல்லது கொஞ்சங் காலத்திற்கு முன்னராய் இது இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் அதை, ஊழியத்தின் ஒரு மாற்றத்தைக் குறித்து வீட்டிலே ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறேன். இங்கு அமர்ந்துள்ள ஜனங்களில் அநேகராகிய நீங்கள்…நான் அநேகர் என்று கூறமாட்டேன். ஆனால் நினைவிருக்கட்டும், நாம் இந்தக் கூடாரத்தை முதலில் கட்டினபோது, நாம் அப்பொழுது அங்கே மூலைக்கல்லை நாட்டினபோது, அந்தக் காலையில் உண்டான தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கும். அப்பொழுது அவரோ, “இது உன்னுடைய கூடாரமல்ல” என்றார். ஆனால் அவர் என்னை ஆகாயத்தின் கீழே அமர்த்தி, வித்தியாசமானக் காரியங்கள் சம்பவிக்கும் என்று என்னிடம் கூறினார். நீங்கள் அதை அறிவீர்களேயானால், அது கூறப்பட்டவிதமாகவே சரியாக அது நிறைவேறுவதை நீங்கள் கவனியுங்கள். புரிகிறதா? அது எப்பொழுதுமே அந்த விதமாகவே இருந்து வருகிறது. ஆகையால் அவர் என்னக் கூறினாரோ, அது தேவனாயிருக்கிறதென்றும், அது உண்மையாயிருக்க வேண்டும் என்றே நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். 5 அதன் பின்னர் கொஞ்சங் காலத்திற்கு முன்னர் நான் ஒரு தரிசனத்தில் இருந்து, ஒரு—ஒரு பெரிய கூடாரத்தைக் கண்டேன். ஓ, அது மிகப்பெரிதான ஒன்றாய், பெரிய காரியமாய் இருந்தது. அப்பொழுது நான் பேசிக்கொண்டிருந்தபோது, அநேக ஆத்துமாக்கள் பீடத்தண்டையிலே இருந்து, தங்களுடையக் கரங்களை மேலே உயர்த்தியிருப்பதோடு ஒருவிதமாய் அமைதியாயும், மௌனமாயும் அழுதுகொண்டிருந்தனர். அப்பொழுது ஓர் அருமையான, பெருந்தன்மையாய்க் கூறப்பட்ட மனிதன் மேடையண்டைக்கு வந்து, “இப்பொழுது சகோதரன் பிரான்ஹாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், அவர்கள் ஜெபவரிசையை அமைப்பார்கள்” என்றார். அப்பொழுது நான் அந்த வழியாக நின்றுகொண்டிருந்தேன், உண்மையாகவே ஜெபவரிசையோ எனக்கு இடப்பக்கமாக இருக்கப் போவதாயிருந்தது. நான் அங்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த ஜனக்கூட்டமானது ஒரு நகரத்தின் தொகுதியை அல்லது அதற்கு அதிகமான இடத்தை நிரப்புவது போன்று தோன்றினதைக் கவனித்தேன். அங்கு ஒரு சிறு கட்டிடம், மரத்தால் செய்யப்பட்ட ஒரு கட்டிடம், இந்தக் கூடாரத்தின் உட்புறத்தில் இருந்தது. அங்கே ஒரு பெண்மணி நின்று கொண்டிருக்க, ஒரு மனிதன் பெயர்களைப் பதிவு செய்ய, ஜனங்களோ முடவருக்கான கக்கத்தண்டுகளோடும், நோயுற்றோரின் தூக்குப் படுக்கைகளிலும் உள்ளே சென்று, மறுபுறத்திலோ வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். நல்லது, அங்கு நடைபெற்ற யாவற்றையும் கண்டு நான் வியப்புற்றேன். அப்பொழுது நீங்கள் இந்தப் புகைப்படத்தில் காண்கிற கர்த்தருடைய தூதனானவர், என்னிடத்திலிருந்து புறப்பட்டு அந்தச் சிறு கட்டிடத்திற்கு மேலே சென்று, அங்கே நின்றுவிட்டுப் பின்னர் கீழேச் சென்றார். அப்பொழுது ஒரு சத்தம் பேசி, “நான் உன்னை அந்த ஸ்தலத்திலே சந்திப்பேன்” என்றது. நல்லது, இப்பொழுது நான் அந்த நேரத்திற்காகவே எதிர்நோக்கியிக்கிறேன். 6 இப்பொழுது நான் அதிகப் பணியின் காரணமாக கொஞ்சகாலம் இளைப்பாற புறப்பட்டுச் சென்றிருந்தேன். ஆயினும் நான் திரும்பி வந்துவிட்டேன். 7 நாம் கடந்த வார இறுதியில் இங்கே மூன்று இரவுகளாக ஒரு விதமான சபை உபதேசத்தை ஒரு சிறு பொருளாகக் கருதிப் பேசி வந்தோம். அது கடந்த சனிக்கிழமை இரவு, ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவாயிருந்தது. இது இந்தக் கூட்டத்திற்கு முந்தினதாயிருந்தது. அது ஒருவிதமாக சபையையே அசைத்த நிலையிலிருந்தது, ஆகையால் நம்மால் தொடர்ந்து சென்று இப்பொழுது இந்த கூட்டத்திற்கு வர முடிந்தது. ஆகையால் இதற்குப் பின்னர் உடனடியாக ஞாயிறு இரவு எனக்குத் தெரிந்த மட்டில் கூடாரத்தில் கொஞ்ச நேரம் என்னை வழியனுப்பும் இரவாய் இருக்கும். இப்பொழுது… 8 நான் தேவனண்டை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டும், நம்பிக்கைக் கொண்டுமிருக்கிறேன், அதாவது இந்த வாரத்தில் கொஞ்ச நேரம் இங்குள்ள இந்தச் சிறிய அறையை ஒரு ஜெப அறையாக பயன்படுத்த விரும்புகிறேன். வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் உள்ளே கொண்டுச்சென்று, அவர் என்னை சந்திப்பாரா என்று காணவும், புதிய ஊழியத்தின் பேரில் மீண்டும் கூடாரத்திலேயே துவங்கவும் உள்ளேன். அது செய்யப்படுவதைக் காண நிச்சயமாகவே நான் வாஞ்சையாயிருப்பேன். என் நண்பர்களே அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. அது என்னவாயிருக்கும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது செவிகொடுப்பவர்களே, அது அவருடைய ஏழ்மையான, வியாதியான, இந்த நாளின் அவதியுற்றுக் கொண்டிருக்கிற பிள்ளைகளுக்கு அதிகமாக உதவும்படியான ஏதோக் காரியமாய் இருக்கும் என்றே நான் நம்புகிறேன். நான் விசுவாசமுள்ளவனாயும், உண்மையுள்ளவனாயும், அவர் எனக்களித்திருக்கிற மற்ற வரங்களோடு நான் உண்மையாயிருந்ததைக் காட்டிலும் அதிக உண்மையாயிருக்க முயற்சிப்பேன் என்று நான் அவருக்கு வாக்களிக்கிறேன். அது நிறைவேறுமேயானால், அப்பொழுது அது மற்றவைகள் இருந்து வருகிற விதமாகவே அப்படியே அவ்வளவு உண்மையாயிருக்கும். இப்பொழுது அது மற்ற வரங்கள், அவைகள் இருந்தவிதமாகவே அவ்வளவு உறுதியாக இன்னமும் அப்படியே இருக்கிறது. புரிகின்றதா? ஆனால் இப்பொழுது புதியதாக ஏதோ ஒரு காரியம் சம்பவிப்பதற்காக நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன், அது இங்கே சம்பவிக்கும் என்று நம்புகிறேன். இப்பொழுது நாம் இன்றிரவு பேசலாம் என்றும், எப்படி நான் உணர்ந்தேன் என்றும் பார்க்கலாம் என்றும் நான் எண்ணியிருக்கிறேன். 9 நான் மற்றொரு காரியத்தைச் செய்ய விரும்பினேன். அதாவது நாம் முதல் முறையாக உள்ளே செல்லும்போது, என்னுடைய மனைவியை அங்கே என்னால் உள்ளே அனுப்ப முடியுமா என்றும், அது முதன் முறையாக உண்டாகும்போது அவள் என்னோடு இருக்கும்படியாகவும், அது அந்தவிதமாக இருக்குமா என்று பார்க்கும்படியாகவும் நான் கண்டறியும்படி முயற்சிக்க விரும்பினேன். அப்படியில்லையென்றால், அப்பொழுது ஸ்திரீகளை உள்ளேக் கொண்டு வந்து, நாம் ஒரே நேரத்தில் அவர்கள் இருவரை, ஒரே நேரத்தில் இரண்டு ஸ்திரீகளை உள்ளேக் கொண்டு வரலாம் என்றிருந்தேன். ஆகையால் அது இரண்டில் ஏதோ ஒரு விதத்தில் கிரியைச் செய்யும் என்று நான் கூறிக்கொண்டிருக்கவில்லை. எனவே நீங்களே அதை அறிந்துகொள்வீர்கள், ஏனென்றால் அது ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது. அதாவது நாம் ஏதோ ஒரு புதுக்காரியம் சம்பவிப்பதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம், நாம் எதிர்நோக்கிக் கொண்டுமிருக்கிறோம். ஆனால் அது சம்பவிக்கும் என்று அவர் என்னிடம் கூறினார் என்று இப்பொழுது நான் கூறவில்லை. அது நான் கண்ட தரிசனத்தில் உள்ள ஒரு கூடாரத்தில் இருந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி அது எங்கும், எந்த நேரத்திலும் சம்பவிக்கலாம். ஆகையால் நாம் அதற்கு எதிர்நோக்கிக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். 10 இப்பொழுது நாங்கள் உங்களைச் சரியான நேரத்தில் அனுப்பிவிட முயற்சிக்கப் போகிறோம். பாடல் ஆராதனை அரைமணி நேரமும், பிரசங்க ஆராதனை மற்றும் பீட ஆராதனை முதலியன ஏறக்குறைய ஒரு மணி நேரமும், ஆக அது ஒன்றரை மணிநேரமுமாயிருக்கும். எனவே நின்று கொண்டிருக்கும் ஜனங்களுக்கு தசைபிடிப்பு ஏற்படாது. எனவே நாளை இரவும் திரும்ப வரலாம். 11 இப்பொழுது நாம் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய வார்த்தைய திறப்பதற்கு சற்று முன்னர், நாங்கள் அதில் உள்ளதற்கு புறம்பாக ஒன்றையுமே ஒருபோதும் கூறமாட்டோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிப்போம், ஏனெனென்றால் அதுவே அஸ்திபாரமாய் உள்ளது. எனவே நாம் அதைச் செய்வதற்கு முன்பு, நாம் அப்படியே ஜெப வார்த்தைக்காக சற்று நேரம் நம்முடையத் தலைகளைத் தாழ்த்துவோமாக. 12 அன்புள்ள தேவனே, நாங்கள் இன்றிரவு உம்முடையப் பிரசன்னத்தில் நிற்கின்றபடியால், நாங்கள் வெறுமனே பூமியின் மண்ணாய் இருக்கிறோம் என்ற எங்களுடையப் பலவீனமான உருவத்தை அறிந்துகொள்கிறோம். உம்மை கனப்படுத்தவும், மகிமைப்படுத்தவுமே நீர் எங்களை ஜீவனுள்ள உருவங்களாய் கொண்டுவந்திருக்கிறீர். எங்களுடைய ஜீவியங்களும், எங்களுடைய இலக்கு உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களில் உள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒரு மேலான உலகத்தில் என்றென்றைக்கும் உம்மோடு ஜீவிக்கும்படியாக எங்களுக்கு அளிக்கப்படும் எங்களுடைய நித்திய இலக்கை நம்பி, விசுவாசத்தின் மூலம் நாங்கள் எங்களையே உம்முடையக் கரங்களில் ஒப்புவித்திருக்கிறோம். அந்த மேலான உலகத்தில் நாங்கள் ஒருபோதும் சுகவீனத்திற்காகவோ அல்லது தேவைக்காகவோ ஜெபத்தை ஏறெடுக்க மாட்டோம். அங்கே ஒரு கன்னத்திலிருந்து ஒரு சொட்டு கண்ணீரும் ஒருபோதும் விழாது. அங்கே ஒருபோதும் ஒரு—ஒரு பலவீனமான, சுருக்கம் விழுந்த நபராய் ஒருவரும் மேலே வரமாட்டார்கள். ஆனால் நாங்கள் அங்கே வாலிபமாய் என்றென்றைக்கும் இருப்போம். தேவனுடைய மகிமையானது எங்கள் மேல் இருக்கும். எங்களுக்கு சுகமளித்தலே தேவைப்படாது, ஏனென்றால் நாங்கள் என்றென்றைக்குமாய் நித்தியமாக சுகமாக்கப்பட்டிருப்போம், இப்பொழுது நாங்கள் இருக்கிற இந்தச் சிருஷ்டிப்பானது மாற்றப்படும்போது, அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்திற்குள்ளாக உருவாக்கப்படுவோம். அப்பொழுது நாங்கள் அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசிப்போம். எங்கள் ஒவ்வொருவருக்கான அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வேளையானது வந்து அடையும் வரையில் நீர் எங்களுக்கு அளித்திருக்கிற அவ்வளவு பெரிதான விசுவாசத்தினால் உம்முடைய மகத்தான நாமத்தை மகிமைப்படுத்தும்படியாக எப்படியாய் நாங்கள் அறிந்துள்ள ஒவ்வொரு பிரயாசத்தையும் நாங்கள் செயலில் ஈடுபடுத்த விரும்புகிறோம். 13 இதுவோ நாங்கள் இங்கு நடத்தின முதலாம் எழுப்புதலின் நினைவு விழாக்களில், இந்தச் சிறிய நினைவு கொண்டாட்ட வழக்க ஸ்தலத்தில் இங்கே இந்த மாலைப் பொழுதில் ஒன்று சேர்ந்துள்ள சிறு கூட்டமாய் உள்ளது. நீர் உம்முடைய மகத்தான, வல்லமையுள்ள கரத்தினால் எங்களுக்கு மகத்தான, வல்லமையுள்ள கிரியைகளைச் செய்து காண்பித்தீர். இங்கிருந்து ஓர் எழுப்புதலானது ஒவ்வொரு தேசத்திற்கும் பெருக்கெடுத்து வேகமாய்ச் சென்றுள்ளது. உலகத்தைச் சுற்றிலும் இன்றிரவு எழுப்புதல் அக்கினிகள் மலைகள் மேல் எரிந்துகொண்டிருக்க, புருஷர்களும், ஸ்திரீகளும் அவர்களுடைய சுகவீனம் மற்றும் வியாதியிலிருந்து சுகமாக்கப்பட்டுக் கொண்டும், உண்மையான ஜீவனுள்ள தேவனோடு அறிமுகமாக்கப்படும்படியாகவும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய ஆவியை எங்கள் மேல், கர்த்தாவே, பெரிதான அளவில் ஊற்றும். 14 கர்த்தாவே, இது உமக்கு மிகவும் பிரீதியாய் இருக்குமானால், இது உம்முடைய தெய்வீக நிகழ்ச்சி நிரலாயிருக்குமாயின், ஓ தேவனே இந்த கட்டிடத்தில் நீர் இந்தப் புதிய வரத்தை கிரியைச் செய்யத் துவங்கும் என்றும், அது ஊழியக்களங்களில் தங்கியிருக்கிற இவர்கள், ஜெப வீரர்களாயிருந்து வருகிற இவர்கள், முதல் முறையாக மகத்தான யேகோவாவின் கரம் இந்தப் புதிய விதத்தில் அசைவதை அவர்கள் கண்டு, அதன் பலன்களுக்குப் பங்காளிகளாயிருக்கும்படிக்கே நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். (கர்த்தாவே, அதை அருளும்.) அது எங்கோ இருக்கும் என்று அறிந்து, அது இங்கே அருளப்பட வேண்டும் என்று நாங்கள் தாழ்மையாய் வேண்டிக்கொள்கிறோம், ஏனென்றால் இது அவ்வண்ணமாய் செய்யும்படியான உம்முடைய மகத்தான முன்தீர்மான நோக்கத்தில் உள்ளது என்று நாங்கள் உணருகிறோம். 15 உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்டப் பரிசுத்த வார்த்தையை, அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புகையில், கர்த்தாவே, இப்பொழுது எங்களை ஆசீர்வதியும், கர்த்தாவே, அதை ஏற்றுக் கொள்ளும்படி எங்களுடைய ஆவிகள் திறக்கப்படுவதாக. இன்றிரவு ஆராதனைகள் முடிவுற்று, நாங்கள் எங்களுடையப் பல்வேறுபட்ட வீடுகளுக்குச் செல்ல புறப்படும்போது, நாங்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று எம்மாவூரிலிருந்து வந்தவர்கள் கூறினது போல இன்றிரவு நாங்களும் கூறுவோமாக. ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 16 இன்றிரவு நான் ஒரு சில வசனங்களை வேதவாசிப்பிற்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன், நீங்கள் அதற்குத் திருப்ப விரும்பினால், இராஜாக்களின் புத்தகம், இராஜாக்களின் முதலாம் புத்தகம், இராஜாக்களின் முதலாம் புஸ்தகம் 18-ம் அதிகாரம். நான் 17-ம் வசனத்திலிருந்து துவங்கி வாசிக்க விரும்புகிறேன். அதன்பின்னர் நான், சரித்திரத்திலிருந்து அவரை வெளியேயெடுத்துயர்த்துதல் என்ற ஒரு பாடப்பொருளை எடுக்க விரும்புகிறேன். இப்பொழுது இதை குறித்துக் கொண்டிருக்கிற உங்களுக்காக நான் அதை மீண்டும் மேற்கோள் காட்டுவேனாக; சரித்திரத்திலிருந்து அவரை வெளியேயெடுத்துயர்த்துதல், இப்பொழுது இராஜாக்களின் முதலாம் புத்தகம் 18-ம் அதிகாரத்தின் 17-ம் வசனம். ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல, கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள். இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறு பேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 17 நாம் இன்றிரவு விளிம்பின் மேல் நின்றுகொண்டு, இரண்டு மகத்தான காட்சிகள் தெரிவிக்கப்பட்டு நிறைவேறுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். அந்த இரண்டு மகத்தானக் காட்சிகள் இவைகளே; அவைகளில் ஒன்று சரித்திரத்தின் முடிவாயிருக்கிறது, மற்றொன்றோ காலத்தின் முடிவாயிருக்கிறது. காலங்களினூடாக வாழ்ந்த அநேக மகத்தான மனிதர்கள் இப்பொழுது நாம் அணுகிக்கொண்டிருக்கிற இந்த வேளையைக் காண வாஞ்சித்திருந்தனர். நாம் இந்த மகிமையான மானிட சூரிய அஸ்தமனத்திலும், நித்திய வெளிச்சத்தின் புலர்தலிலும் ஜீவிக்கின்றபடியால் எப்போதும் மனிதன் வாழும்படிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற காலங்களிலேயே மிகச் சிறந்த ஒன்றில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்று நான் உணருகிறேன். ஏனென்றால் இது காலத்தின் முடிவாயும், நித்தியத்தில் இணைவதாயும் உள்ளது. சரித்திரமானது நாம் என்ன படித்திருக்கிறோம், என்ன இருந்து வந்துள்ளது என்பதை மட்டுமே நமக்குக் கூறுகிறது. எதிர்காலத்தில் என்ன உள்ளது என்பதோ தேவனுடையக் கரத்தில் உள்ளது. சரித்திரமானது மிகவும் அதிக அளவில் எழுதப்பட்டிருக்கவில்லையென்பதை இன்றைக்கு நாம் கண்டறிகிறோம். ஏனென்றால் அது எப்போதுமே உபயோகப்படும் என்று நான் நினைக்கவில்லை. 18 இந்த ஒரு மகத்தான நிகழ்வுகளுமே மேலோட்டமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக…நாம் தேசிய நெருக்கடிகளை எவ்வாறு தீர்த்துவைத்துக் கொண்டிருக்கிறோம். தேசியப் பாதுகாப்பும் மேலோட்டமான நிலையில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பயணிக்கையில் இது நம்முடைய தேசத்தில் மட்டுமல்ல என்பதுபோல தென்படுகிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று எந்த தேசத்திற்குமே தெரியவில்லை. எங்கும் குழப்பம் உள்ளது போல் தென்படுகிறது. நான் ஆப்பிரிக்காவிற்குள் செல்லும்போது, அவர்கள் எல்லோருமே ஜனங்கள் மத்தியில் காணப்படும் கிளர்ச்சியைக் குறித்துப் பயப்படுகின்றனர், பொது உடைமைக் கொள்கையோ (Communism) தேசத்தில் எங்கும் பெருக்கெடுத்துப் பரவிக் கொண்டிருக்கிறது. நான் சுவிட்சர்லாந்திற்குள் சென்றாலும் இதேவிதமாகவே உள்ளது. நான் விஜயம் செய்திருக்கிற மற்ற எல்லாத் தேசங்களிலும் நிலையற்ற சமாதானமே நிலவியுள்ளது போன்றே அவைகள் தென்படுகின்றது. 19 இப்பொழுது நம்முடையக் கர்த்தர், “தேசங்களுக்கிடையே அமைதியின்மையும், தத்தளிப்புண்டாக்கும் நேரமும், தேசங்களுக்கிடையே இடுக்கணும்” உண்டாகும் என்றும், அப்படிப்பட்ட ஒரு நேரம் உண்டாகும் என்றும் முன்னறிவித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 20 நாம் மனிதத்தன்மையோடு செய்யக்கூடியதாய்த் தோன்றுகிற ஒவ்வொரு காரியத்தையுங்கொண்டு அதனைக் கொஞ்சகாலமாவது நீடித்திருக்கும்படி செய்ய முயற்சித்திருக்கிறோம். ஆனால் நாம் காலத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன். அதைக் குறித்து நம்மால் செய்ய முடிந்த வேறெந்த காரியமாவது உண்டு என்பதை நான் நம்பவில்லை. நாம் அதனுடைய முடிவில் இருக்கிறோம். நாம் கொஞ்ச காலம் இராஜாக்களைக் கொண்டு முயற்சித்தோம். அவர்களால் கிரியை செய்ய முடியவில்லை. அதன்பின்னர் அவர்கள் ஜனநாயகத்தைக் கொண்டு முயற்சித்தனர்; அதுவும் கிரியை செய்யவில்லை. நாம் முயற்சித்தோம்…அவர்கள் சர்வாதிகாரிகளைக் கொண்டு முயற்சித்தனர், அதுவும் கிரியை செய்யவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையும் சற்று மேலோட்டமாகச் செயல்படுவது போன்றே தென்படுகிறது. இப்பொழுது ஏதாவது சம்பவிக்கக்கூடும் என்றே மகத்தான வேளையில் நாம் நிற்கிறோம். அது ஐந்து நிமிடத்திலேயே முற்றுபெற்றுவிடக்கூடும், அதாவது ஒவ்வொரு தேசமும் பொடியாய் நிலத்தில் கிடத்தப்படும் 21 நாம் அந்த நேரத்தில் இருப்போமேயானால், சபையானது எங்கே இருக்க வேண்டும்? ஒரு பெரிதான நெருக்கடியாயிற்றே! 22 ஆகையால் நாமும்கூட ஓர் இல்லற—வாழ்க்கை இக்கட்டை உடையவர்களாயிருக்கிறோம். வீட்டு வாழ்க்கையானது மேலோட்டமான தண்ணீருக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது போன்றே தென்படுகிறது. அது வழக்கமாக ஒரு வீட்டில் அந்தத் தகப்பனார், குடும்பத்தின் தலைவர் காலையில் அமர்ந்து, அவர் தன்னுடையக் குடும்பத்தோடு பேசுவார். அவர்கள் யாவரும் பண்டையக் குடும்ப வேதாகமத்தை எடுத்து, ஒரு சிறிய பகுதியை வாசித்துவிட்டு, யாவருமாய் மேஜையைச் சுற்றி சேர்ந்து ஜெபத்தை ஏறெடுப்பர். நீங்களோ அதை ஒருபோதும் காண்பதில்லை. பொழுது சென்றவுடனே, தாயார் பாத்திரங்களைக் கழுவின பின்பு, அவர்கள் யாவரும் உள்ளே ஒன்றுகூடி, வேதாகமத்திலிருந்து ஒரு சில பகுதிகளை வாசித்துவிட்டு, படுக்கைக்குச் செல்லும் முன் ஜெபிப்பார்கள். 23 அந்நாட்களில் இளைஞர் புரியும் தீயச்செயலைக் கண்டறிவது நிச்சயமாகவே ஒரு கடினமான காரியமாய் இருந்தது. பையன்கள் யாவருமே பணிபுரிய வீட்டைவிட்டு வெளியேச் சென்றனர். பெண்பிள்ளைகளோ கீழே ஓடும் ஆற்று நீரோடையில் தங்களுடையத் துணிகளைத் துவைப்பதன் மூலம் தாயாருக்கு உதவி செய்தனர். ஆனால் இன்றைக்கோ ஒரு பொத்தானை அழுத்த, பாத்திரங்கள் எல்லாமே கழுவப்படுகின்றன. அம்மாவோ காரில் ஏறி சீட்டு விளையாட்டிற்கு அல்லது வீதிகளில் சுற்றித் திரிய சென்றுவிடுகிறாள். பணியும் ஒர் இயந்திரக் கலப்பையினால் செய்யப்படுகிறது. எனவே நாம் ஒரு கூட்ட சோம்பேறிகளாய், வேலையற்ற ஜனங்களாய் இருப்பதைத் தவிர வேறொன்றையும் உடையவர்களாயிருக்கவில்லை. 24 அமெரிக்காவில் உள்ள அநேக வீடுகளில் வேதாகமானது ஒதுக்கி வைக்கப்பட்டு, அவர்கள் அதைக் கண்டுபிடிக்க ஒரு மணி நேரமாவது துருவித் தேட வேண்டியளவிற்கு வீட்டு வாழ்க்கையானது மிகவும் விழிப்புத் தளரவிடப் பட்டதாயுள்ளது. அவர்கள் ஞாயிறு காலையில் தங்களுடைய மார்க்கத்திற்காக சுமார் இருபது நிமிடங்களே இருக்கும்படியாக சபைக்குச் செல்கிறார்கள். போதகரோ சுமார் முப்பது நிமிடங்கள் எடுத்துக்கொண்டால், அவர் நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்படுகிறார். அது என்ன? வீட்டு வாழ்க்கையே விரயமாகிக் கொண்டிருக்கிறது. 25 வழக்கமாக முன்பெல்லாம் தகப்பனாரும், தாயாரும் ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து, உயர்மதிப்புக்காட்டி, நெஞ்சார நேசித்து வந்தனர். தாயார் வயதாகி, மடிப்பு விழுந்து காணப்படும்போதும், அவளுடைய வளமற்ற வயோதிக முகத்தில் சுருக்கம் விழுந்து காணப்படும்போதும், அவளுடைய மூக்குக் கண்ணாடியானது அவளுடைய மூக்கிற்கு மேலே கீழ் நோக்கியவாறு தொங்கிக்கொண்டிருக்கும்போதும் தகப்பனாரோ அவள் வாலிபமாகவும் அழகாகவும் இருந்தபோது அவர் நேசித்ததுப் போன்றே அப்படியே அவளை நேசிப்பார். 26 ஆனால் இன்றைக்கோ நான் குற்றங்காணும்படியாய்ப் பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் அவள் சற்று வயோதிக நிலையை அடையும்போதே, அவர் வேறு ஒரு பெண்ணை ஒரு புதிய மாதிரியாய் மாற்றிக்கொள்கிறார். அது கார்களை அல்லது மற்றேதோக் காரியத்தை மாற்றுவது போன்று, அந்தவிதமாயிருப்பது போன்றேத் தென்படுகிறது. உண்மையான குடும்ப அன்பானது அதிக அளவில் காணப்படுகிறதில்லை என்பது போன்றே தோன்றுகிறது. ஏதோக் காரியம் சம்பவித்திருக்கிறது. வீட்டு வாழ்க்கை விரயமாகிக் கொண்டிருக்கிறது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு நாம் வழக்கமாகக் கொண்டிருந்த பண்டைய அமெரிக்க இல்லத்தை நாம் உடையவர்களாயிருக்கவில்லை. 27 நான் கூற விரும்புகிற மற்றொரு காரியம் உண்டு. அது முடிவுற்றுக் கொண்டிருக்கிற மற்றொரு காரியமாயிருக்கிறது. நட்புறவு சீரழிந்து கொண்டிருக்கிறது. நாம் வழக்கமாகக் கொண்டிருந்த நண்பர்களை இப்பொழுது நாம் கொண்டிருக்கவில்லை என்பதுபோல் தென்படுகிறது. நாம் முன்பெல்லாம் கொண்டிருந்த உண்மையான நண்பர்களை இப்பொழுது உடையவர்களாயிருக்கவில்லை. முன்பெல்லாம் இவ்வாறிருந்து வந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது. அதாவது அக்கம் பக்கத்தில் உள்ள யாரோ ஒருவர் சுகவீனமடைந்திருக்கும் போது, சுற்றிலுமுள்ள எல்லோருமே வந்து, அவர்களுடைய எல்லா வேலையையும் செய்ய அவர்களோடு உதவி செய்வர், மற்றும் செய்ய முடிந்த எந்தக் காரியத்திற்கும் ஒரு கரமளித்து உதவிபுரிந்தனர். ஒரு நேரத்தில் அவர்களோடு முழு இரவுமே தரித்திருப்பர். நான் அடிக்கடி கூறியிருப்பது போன்றே இது உண்மையாயிருக்கிறது. அதாவது அண்டை வீட்டார் மரித்து போய்விட்டார் என்பதை நாம் செய்தித்தாளில் காணும் வரைக்கும் நாம் அதை அறிந்துகொள்வதேயில்லை. அதுதான் நட்புறவா? 28 அப்பா வீட்டிற்கு ஒரு சாவியை வைத்திருக்கிறார். அம்மா ஒரு சாவியை வைத்திருக்கிறார். அவர்கள் இருவருமே பாதி இராத்திரி வரை வெளியே சென்றுவிடுகிறார்கள். பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். சிறுபிள்ளைகளோ பெற்றோர் வெளியே செல்லும்போது குழந்தைகளைப் பேணிக் காப்பவரோடு இருக்கின்றனர். அந்தவிதமாகவே வாழ்க்கையானது வாழப்படுகின்றது. 29 வேதாகமம் இந்த எல்லாக் காரியங்களையும் முன்னறிவிக்கிறது என்பதை நீங்கள் அறிவீகளா? ஆகையினால் இது என்ன? இந்தக் காரியங்கள் முடிவுக்கு வருவதைக் கவனிக்கும் ஒரு நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதாய் இது உள்ளது. 30 நாம் சபை வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். அங்கேதான் இவை யாவுமே துவங்கின. சபை வாழ்க்கையும் விரயமாகிக்கொண்டிருக்கிறது. ஜனங்களோ இன்றைக்கு சபையை ஏறக்குறைய ஒரு விக்கிரகமாகவே, ஒரு குலமரபுச் சின்ன நிலைக் கம்பத்தைப் போன்று எண்ணிக்கொள்கின்றனர். போய் சபையில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து, “நான் என்னுடைய மார்க்கத்திற்குரியதை செய்துவிட்டேன்” என்கின்றனர். உங்களுடைய சிறு பங்களிப்பில், அது என்னவாயிருந்தாலும் செலுத்துகிறீர்கள், போதகருக்குச் செலுத்துகிறீர்கள். இது அவர்கள் பற்றாக் குறைவை நிரப்புகிறதில்லை; அவர்கள் ஒரு சிறு இரவு உணவைக் கொண்டு வந்து, அதை போதகருக்கு அளித்து சமரசமாக்குகின்றனர். அவர் திருப்தியடையவில்லையென்றால், அப்பொழுது அவர் தனக்கு இன்னும் மேலாக ஊதியம் வழங்கும் எங்காவது புறப்பட்டுச் செல்கிறார். அது போதகர் தெய்வீகப் பிரகாரமாக அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பது போன்றே தென்படுகிறது. அது போதகருக்கு ஓர் ஆகாரச் சீட்டு இருக்க வேண்டும் என்பதே துவக்கமாயிருக்கிறது என்பது போன்றே தென்படுகிறது. அதாவது, ஜனங்கள் அவருக்கு எங்கெல்லாம் மிக அதிகமாகப் பணம் அளிக்கின்றனரோ, அங்கேயே அவர் செல்கிறார். அது அந்தவிதமாய் இருக்கக்கூடாது. 31 அது ஒரு மக்கள் சமுதாயத்திற்குத் தேவனால் அழைக்கப்பட்ட ஒரு மனிதன் என்றே இருக்க வேண்டும். அவர் எலியா செய்ததுபோன்றே மலையின் உச்சியில் கேரீத் ஆற்றண்டையிலே காகங்கள் அவரைப் போஷிக்கும்படி எதிர்பார்த்து அங்கேயே படுத்துக்கிடக்க வேண்டியதாயிருந்தாலும், அவருடையத் தெய்வீக ஊழியமானது நிறைவேற்றப்படும் வரையில் அவர் தரித்திருக்க வேண்டும். அவர் கொஞ்சம் பணம் பெறுகிறாரா அல்லது இல்லையா என்பது முக்கியமல்ல, முதலில் அது தேவனுடைய அழைப்பாய் இருக்க வேண்டும். 32 ஆனால் அது பணத்தின் அழைப்பை அல்லது ஒரு பெரிய நிலையை மற்றும் அந்த ஒழுங்கின் பேரிலான ஏதோ ஒன்றை, அல்லது அதிக புகழ்வாய்ந்த நபராக மாறுவதற்கு, ஒரு பெரிய சபையாவதற்கு அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றாவதைப் போன்றதான நிலையை மாற்றுகின்றது. 33 அதன்பின்னர் அவர்கள் அங்குள்ள சபையை விட்டு விடுகின்றனர். அவர்கள் ஒன்றுமற்றவர்களாகத் துவங்குகின்றனர். இது வெளிப்படுவதைக் கவனியுங்கள். 34 இப்பொழுது நான் இன்னமும் ஐம்பது வயதிற்கு கீழானவனாகவே இருக்கிறேன். பாப்டிஸ்டு சபைக்கும், மெத்தோடிஸ்டு சபைகளுக்கும் சென்று, பண்டைய மாதிரியான எழுப்புதல் கூட்டங்களில் அவர்களைக் கவனித்ததை என்னால் நினைவுகூர முடிகிறது. அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு, கர்த்தரை ஸ்தோத்தரித்து, சபையின் பிரகாரத்தில் மேலும் கீழுமாய் நடந்து பாவிகளைப் பீடத்தண்டைச் செல்ல சம்மதிக்க வைப்பர். நீங்கள் அதை இனிமேல் எங்குமே ஒருபோதும் காணமாட்டீர்கள். அவர்கள் ஓர் எழுப்புதலின் நேரத்தில் பண்டைய மாதிரிகொண்ட ஜெபக் கூட்டங்களை வழக்கமாக வைத்திருப்பார்கள்; அது அண்டை வீட்டிலுள்ள ஒரு பாவிக்கோ, ஒரு பையனுக்கோ அல்லது பெண்ணுக்காகவோ இருந்திருக்கலாம். பண்டையத் தாய்மார்களும், தகப்பன்மார்களும் அந்தப் பிள்ளைகள்மேல் திடநம்பிக்கை வரும்வரையில் ஜெபிப்பார்கள், அவ்வளவுக் கடினமாக ஜெபிப்பார்கள். அப்பொழுது அவர்கள் பீடத்தண்டையில் தங்களுடைய வழியை சரிசெய்து, கிறிஸ்துவண்டை வருவர். 35 ஆனால் நீங்கள் அதை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். அது ஆழமற்ற தண்ணீரில் ஓடிக் கொண்டிருக்கிறது போன்று தென்படுகிறது. அது அந்தவிதமாய் இருக்க வேண்டும் என்பது போன்று தென்படவில்லை. 36 அப்பொழுதெல்லாம் வழக்கமாக அநேக சபைகள் அவ்வாறு இருந்ததுண்டு. அநேக வருடங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு சபையில் ஓர் எழுப்புதல் கூட்டம் வைத்தால், அப்பொழுது மற்ற எல்லாச் சபைகளுக்கும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும், அவர்கள் வந்து, உதவி செய்து மற்றும் தங்களுடைய அங்கத்தினர்களை அங்கே அனுப்பி, மற்ற சபைகளை மூடி, ஓர் எழுப்புதல் கூட்டத்தை நடத்துவர். நீங்கள் அதை இனிமேல் காணமாட்டீர்கள். 37 இப்பொழுது என்ன சம்பவித்துள்ளது? அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? அது அப்படியே ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதாய் இருக்கிறது. அது இரண்டு நிலைகளைச் சுட்டிக் காண்பிக்கிறது; அவைகளில் ஒன்று காலம் முடிவடைந்து கொண்டிருக்கிறது, மற்றொன்றோ கர்த்தராகிய இயேசுவின் வருகையாகும். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் உறுதியாக உரைத்துள்ளதோ, “கடைசிநாட்களில் சபைகள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும்; இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆகையால் அப்படிப்பட்ட காரியங்கள் இருக்கும் என்று வேதமானது முன்னறிவித்திருக்குமேயானால், நாம் எப்படி அது சம்பவிப்பதைத் தவிர வேறெந்தக் காரியத்தையும் எதிர்பார்க்க முடியும்? “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலித்தல்”. 38 இன்றையத் தேசத்தினூடாகச் சென்று, நம்முடையத் தேசங்களில் விசுவாசமாயிருக்கிற கொஞ்சம் கைப்பிடியளவு விசுவாசிகளைக் கண்டுபிடியுங்கள். உண்மையாகவே இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று விசுவாசிக்கிற உண்மையான விசுவாசிகளையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். பாருங்கள், அவர்கள் சபையை ஒரு விக்கிரகமாக வைத்துவிட்டனர். நாம் கடந்த சில தினங்களில் நம்முடையப் போதனையில் அதனூடாகப் பார்த்து வந்திருக்கிறோம். நாம் அதை கத்தோலிக்க சபையின் மேலும், அவர்களுடைய விக்கிரங்களின் மேலும், சபையின் அருகே அவர்கள் கடந்து செல்லும்போது அதற்குப் பணிந்து வணங்குவதன் பேரிலும் பழி சுமத்துகிறோம். பிராட்டெஸ்டெண்டுகளும் அதேபோன்று அவ்வளவு மோசமாயிருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே எப்பொழுதாவது ஒருமுறை சபைக்குச் செல்லுகிறார்கள். மேலும் அவர்களில் சிலர் வருடத்திற்கு ஒருமுறை செல்லுவார்கள். அது ஈஸ்டர் அன்றாய் உள்ளது. 39 அண்மையில் நகரத்தில் இங்கே ஒரு ஊழியக்காரர் இந்தக் கருத்துக் குறிப்பைக் கூறினதை நான் கேள்விப்பட்டேன். அவர், “நான் என்னுடைய எல்லா ஜனங்களுக்கும் ஈஸ்டர் காலையன்று ‘ஒரு மகிழ்வார்ந்த கிறிஸ்துமஸ்’ என்று கூறினேன்” என்றார். ஏனென்றால், “நான் அவர்களை இனிமேல் கிறிஸ்துமஸ் இல்லை அடுத்த ஈஸ்டர் வரையிலும் காணமாட்டேன், எனவே ஒரு மகிழ்வார்ந்த கிறிஸ்துமஸ்!” என்றார். 40 நான் இங்கு நின்று, இந்தக் காரியங்கள் வெளிப்படுவதைக் கவனிக்கும்போது, மானிடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதோக் காரியம் சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். அது அப்படியே இந்தவிதமாகவே செல்ல முடியாது. 41 ஒவ்வொரு நபரும் ஐந்து நிமிடங்கள் நிற்பதற்குரிய நேரத்தை உடையவர்களாயிருக்கவில்லை. அவர்கள் வீதியினூடாகத் தள்ளிக்கொண்டும், ஓடிக்கொண்டும், அவசரமாகச் சென்று கொண்டும், நெருக்கிகொண்டும் செல்கிறார்கள். இந்தப் பிற்பகல் நெடுஞ்சாசலையில் பிள்ளைகள் வந்துகொண்டிருந்தபோது, நானும் வந்துகொண்டிருந்தேன்…அதாவது அது நண்பகலாயிருந்தது. நான் நியூ ஆல்பனியிலிருந்து வந்து கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளைகளுக்கு இடையில் சாலையினூடாக ஒரு பெண்மணி, ஏறக்குறைய…இருபது மைல் வேகத்தில் செல்லக்கூடிய ஒரு பகுதியில், கிட்டத்தட்ட மணிக்கு அறுபது அல்லது எழுபது மைல் வேகத்தில், அவளால் முடிந்த அளவு முழு வேகத்தில் வந்து சென்றாள். அவள் எங்கே போய்க்கொண்டிருந்தாள்? அப்பொழுது ஒரு சில நிமிடங்களில் நான் என்னோடிருந்த நபரிடத்தில், “நீர் அதைக்குறித்து என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டேன். இதோ இன்னும் இரண்டு கார்கள் அந்தப் பிள்ளைகளுக்கு மத்தியில் முழு வேகத்தில் பந்தயத்தில் செல்வது போன்று சென்றன. நாம் வாழும் இடுக்கமான வீதியானது காலையில் ஒரு பந்தயப் பாதைப் போன்று உள்ளது. பாத்திரங்களைக் கழுவ அல்லது ஆர்த்தர் காட்ஃபிரே நிகழ்ச்சியைக் கேட்க அல்லது ஏதோ ஒன்றுக்குத் துரிதமாக வீட்டிற்கு விரைந்து செல்ல வேண்டியவர்களாயிருக்கிறார்கள். நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்? காரியம் என்ன? எல்லா நிலைகுலைவுக் காரியத்திற்கும் விளைவாகப் பெற்றுள்ளது என்னவென்றால் புருஷரும், ஸ்திரீகளும் இந்தத் தற்போதைய உலகின் பிரியர்களாக மாறியிருப்பதேக் காரணமாகும். மகத்தான காரியமாய் இருக்க வேண்டியதோ வேதாகமத்தை வாசிக்கவும், மற்றும் ஜெபிக்கும்படி நேரத்துக்கு வீட்டிற்கு வருவதுமேயாகும். 42 ஜான் வெஸ்லியினுடையத் தாயார் சூசன்னாளைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன். அவள் பதினேழு பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தாள். அவள் ஜெபத்தில் செலவழிக்க வேண்டியிருந்த நேரத்தை நான் எண்ணிப்பார்க்கிறேன், அது ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் செல்வழித்ததேயாகும். பதினேழு பிள்ளைகளை வளர்த்த தாய், அவர்களில் ஒருவர் உலகத்தினுடைய மகத்தான பிரசங்கிமார்களில் ஒருவராய் கொண்டுவரப்பட்டார். மற்றொருவர் அந்நாளின் மகத்தான பாடல் எழுத்தாளர்களில் ஒருவராய் விளங்கினார். அது சார்லஸ் அவர்களும், ஜான் அவர்களுமேயாகும். ஏனென்றால் அவள் தேவனைச் சேவிக்க நேரத்தை எடுத்துக்கொண்டாளேயன்றி உலகத்தின் காரியங்களில் வீணாய் காலத்தை செலவழிக்கவில்லை. 43 நாம் நமுடைய தேசத்தின் நம்முடைய அஸ்திபாரம், நம்முடைய வீட்டின் அஸ்திபாரம், நம்முடைய சபையின் அஸ்திபாரம் மூழ்குவதைக் கண்டப் பின்னர், நம்மால் என்ன செய்ய முடியும்? அப்படியானால் நான் இதைக் கூற விரும்புகிறேன். ஓ, உலகத்திற்கு எதிரொலிக்கக் கூடிய ஒரு சத்தத்தை நான் உடையவனாயிருந்தால் நலமாயிருக்கும்! நாம் ஒரு திடமான அஸ்திபாரத்தை விட்டுவிட்டோம். அது தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த வார்த்தையான வேதாகமமாயுள்ளது. வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை. “இந்தக் கல்லின் மேல்”, தேவன், “நான் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார். 44 ஆகையால் தேவனுடைய நல்ல பண்டைய வேதாகமத்தை கரம் நீட்டி எடுத்து, அதனுடைய பக்கங்களைத் திருப்பி, நாம் நேரடியாகச் சத்தியத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருப்பது நம்மெல்லோருக்குமே அது என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியமாய் இருக்கிறது. கடந்த நாட்களில் சம்பவித்த இந்த் நேரங்களைக் காண்கிறோம். அப்பொழுது அது ஒரு சரித்திரப்பிரகாரமான தேவனைக் குறித்துப் பேசுகிறது. இந்த வழிகளில் அல்லது இந்த ஒழுங்கில் அமையும்படி நாம் எப்போதும் முயன்று வெற்றிப் பெறும்படியாயிருப்பதற்கான ஒரே வழி அந்தச் சரித்திரப் பிரகாரமான தேவனை, சரித்திரத்திலிருந்து வெளியே அழைப்பதாகும். ஏனென்றால் எல்லா நாட்களினூடாகவுமே, ஜலப்பிரளய அழிவிலும், கிறிஸ்துவின் வருகைக்கு முன்னதான வித்தியாசமான நிகழ்வுகளிலும் அவர் முறையிடப்படும்போது, அவர் ஒருபோதும் கைவிடுகிறதில்லை. அவர் எப்பொழுதுமே சரியாக இருக்கிறார். 45 நான் இப்பொழுது ஒரு நேரத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்க்கிறேன். அதாவது ஒரு தேசமானது சிறையிருப்பில் இருந்தது. அது இஸ்ரவேலாயிருந்தது. அவர்கள் எகிப்தில் இருந்தபோது, எகிப்தியர்களைச் சேவிக்கப் பொறுக்க முடியாத வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். அது ஒவ்வொருவரும் ஆர்வமிழந்து ஊக்கமற்று காணப்பட்டு வந்தது போன்றேத் தென்பட்டது. ஐக்கிய நாடுகள் ஒரு தேசமாக ஸ்தாபிக்கப்படும் வரையில் இருந்ததைப்போல, இஸ்ரவேலர் இருமடங்கு எகிப்தில் இருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? நாம் கிட்டத்தட்ட அதைப் போன்று நூற்றைம்பது அல்லது எழுபது வருடங்கள் கூட அவ்வாறிருக்கவில்லை. அவர்களோ எகிப்தில் அடிமைத்தனத்தில் நானூற்று இருபது வருடங்கள் இருந்தனர். ஆனால் ஒரு நேரம் வந்தபோது, எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது போன்று தென்பட்டது. 46 ஆனால் ஒரு மனிதனும், ஸ்திரீயும் நெருக்கடியான நேரத்தில் ஆபிரகாமினிடத்தில் பேசின ஒரு சரித்திரப் பிரகாரமான தேவனிடத்தில் விசுவாசங்கொண்டிருந்தது போன்று தென்பட்டது. அவர்கள் அவரிடத்தில் முறையிட்டால், அவர் மறு உத்தரவு அருளுவார் என்று விசுவாசித்தனர். அது காமா…யிருந்தது—அம்ராம், யோகெபேத், அம்ராமின் மனைவியாயிருந்தாள். அவர்கள் மோசேயின் தாய் தகப்பனாயிருந்தனர். அண்மையில் இங்கே கொஞ்சகாலத்திற்கு முன்னர், எப்படி அந்த அம்ராம் இரவிலே வீட்டிற்கு வருவார் என்றும், அப்பொழுது அவர், “யோகெபேத்தே, நான் மிகவும் களைப்புற்றிருக்கிறேன்” என்று எப்படிக் கூறுவார் என்பதைக் குறித்து தெளிவாக ஒரு சிறு எடுத்துக்காட்டினை அளித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவருடைய முதுகில் ஆளோட்டிகளின் கசையடிகள் ஆறாமல் இரணமாய் இருக்கும். 47 அப்பொழுது அவளோ பொறுமையாய் அமர்ந்து, ஒருவேளை அந்தக் காயம்பட்ட இடங்களைக் கழுவித்துடைத்து, அழுதுகொண்டே, “ஓ, அம்ராமே, ஏதோக்காரியம் செய்யப்படக் கூடியதாயிருக்கவில்லையா?” என்று கூறுவாள். 48 அப்பொழுது அவரோ, “ஓ, அன்பே, நீ இன்றைக்கு என்னோடு இருந்திருந்தால், அந்த வாலிபர்கள் அந்தச் சுமைகளை இழுக்க முயற்சித்தபோது, அவர்களை அடித்ததைப் பார்த்திருப்பாய். அவர்கள் இருதயமற்றவர்களாயிருந்தனர். அவர்கள் இவர்களை மிருகங்களைப் போன்றே நடத்தினர். அது நம்முடைய இஸ்ரவேலின் வாலிபப் புருஷர்கள். ஏதோக் காரியம் செய்யப்படக் கூடியதாயிருக்கவில்லையா?” என்று கூறுவதை நான் கேட்டிருப்பேன். 49 அதைக் குறித்துதான் இப்பொழுது நான் வியப்புறுகிறேன். நம்முடைய வாலிபப்பருவ பையன்களைக் காணும்போது, அவர்கள் அதாவது இன்றைய நம்முடைய வாலிபப் பருவத்தினர் நாளையப் புருஷரும் ஸ்திரீயுமாயிருப்பார்களே. அவர்களுடைய கழுத்துவரை முடி தொங்க, அவர்களுடைய இடுப்புகளுக்கு கீழே குறுங்காற் சட்டைகள் கீழே இறங்கியிருக்க, அவர்களுடையப் பக்கவாட்டில் ஒரு கைத்துப்பாக்கி, செருகி வைக்கப்பட்டிருப்பதோடும், அவர்களுடைய வாய்களின் ஓரத்தில் ஒரு சிகெரெட்டோடும் காணப்படுகின்றனர். அது என்னவாயிருக்கும்? அது இன்னமும் பிசாசின் கீழான அடிமை நிலையாய் இருக்கிறது. ஏதோக் காரியம் செய்யப்படக் கூடியதாயிருக்கவில்லையா? 50 அம்ராம், ஒருவேளை தேசத்திலிருந்தவர்களிலேயே ஒரே ஒருவர், அவர் அவ்வளவு களைப்புற்றிருந்தாலும் பொருட்படுத்தாமல், ஒரு சிறு ஏணிப்படிகளின் மேல் ஏறிச் சென்றிருப்பார். அங்கே அவர் ஒவ்வொரு இரவும் துன்ப வேளைகளில் ஆபிரகாமிடம் வந்த, யோபுவிடம் வந்த, ஈசாக்கினிடத்தில் வந்த, யாக்கோபுவினிடத்தில் வந்தவரைக் குறித்து அவர் கற்றறிந்த ஆபிரகாமின் தேவனை நோக்கி முறையிட்டிருப்பார். நிச்சயமாகவே, அவர் அவர்களுடைய நாளில் தேவனாய் இருந்திருந்தால், அவர் அந்த நாளிலும் தேவனாய் இருந்திருப்பார். 51 அவர் மோசேயின் நாளில் தேவனாய் இருந்தாரானால், அவர் இன்றைக்கும் தேவனாய் இருக்கிறார். அவர் சரித்திரத்திலிருந்து வெளியே அழைக்கப்பட வேண்டியவராயிருக்கிறார், செயல்புரிய காட்சியில் அழைக்கப்பட வேண்டியவராயிருக்கிறார். 52 என்னால் ஒவ்வொரு இரவும் அம்ராமைக் காண முடிகிறது. எவ்வளவுதான் களைப்புற்றபோதிலும் கவலைப்படவேயில்லை; அதுவே அந்தத் தேவனில் அவருடைய விசுவாசத்தை நிரூபித்தது. 53 ஆனால் இன்றைக்கு ஜனங்கள், முதன்முறையாக அவர்கள் ஜெபிக்கும்போதே, அவர்கள் கேட்கிற எல்லாவற்றையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், அப்பொழுது அவர் மரித்துவிட்டார் என்றே அவர்களுக்குக் கருதத் தோன்றுகிறது. இன்றைக்கு நமக்குத் தேவை என்னவென்றால், தீரமான ஆவியையுடைய புருஷர்களும் ஸ்திரீகளும் உண்மையாகவே ஜீவிக்கிற ஒரு தேவனைக் காணும் வரையில். செயலுக்குள்ளாக வரும்வரையில், பதிலுக்காக கவலைப்படாமல் பற்றிக் கொண்டிருக்க தீர்மானிக்கப்படுகின்ற புருஷர்களும் ஸ்திரீகளுமேயாகும். அவர்கள் அதனோடு தரித்திருக்கும்படி தீர்மானிக்கப்படுகின்றனர். அவர்கள் சுகவீனமாயிருக்க, மருத்துவரோ அவர்கள் சுகம் பெற இயலாது என்று கூறியிருந்தாலும், அதே சமயத்தில் அவர்கள் சுகமடையப் போகிறார்கள் என்று அவர்களுக்குள்ளிருக்கிற ஏதோ ஒன்று அவர்களிடம் சொல்லுகிறது. என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து பற்றிக் கொண்டிருங்கள். நீங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நடந்து திரிந்து உங்களுடைய முழு பெலனும் செலவழிந்தப் பிறகும், நீங்கள் உலகப்பிரகாரமான ஸ்தாபன சபைகளில் சேர்ந்திருக்கிறீர்களா? உங்களால் இன்னமும் நிவாரணத்தைக் கண்டறிய முடியவில்லையா? பாவத்திலிருந்து இரட்சிக்கிற, ஜெபத்திற்கு பதிலளிக்கிற ஒரு தேவன் இன்னமும் உண்டே. 54 அம்ராம் அந்தக் களைப்படைந்த இரவுகளில் முதுகில் இரத்தம் கசிந்து கொண்டிருக்க, மீண்டுமாய் படிகட்டுகளில் மேலேறிச் சென்று, காலையில் இரண்டு அல்லது மூன்று மணி வரையிலும் ஜெபிப்பது, அவர் காற்றினிடத்தில் வெறுமனே பேசிக் கொண்டிருப்பது போன்று தென்படுவதை நம்மால் காண முடிகிறது. அங்கே அவருடைய யூத இருதயத்தில் எந்தச் சந்தேகக் காற்றும் அவித்துப்போட முடியாத ஒரு விசுவாசம் எரிந்தது. 55 அந்தவிதமான புருஷரும், ஸ்திரீகளுமே இன்றைக்கு நமக்கு காட்சியில் எழும்ப வேண்டியதாயிருக்கிறது. அவர் இன்றிரவு பதிலளிக்கவில்லையென்றால், அவர் நாளை இரவு பதிலளிப்பார். அவர் இந்த வருடம் பதிலளிக்கவில்லை என்றால், அவர் அடுத்த வருடம் பதிலளிப்பார். ஏனென்றால் அவர் ஒரே தேவனாயிருக்கிறார்; ஏதோ ஒரு தேவனல்ல, ஆனால் அந்த ஒரே தேவனாயிருக்கிறார். 56 அம்ராம் படிகளில் ஏறிச் சென்றதாக நாம் ஒவ்வொரு இரவும் காண்கிறோம். யோகெபேத் அவரிடத்திற்கு மேலே வந்து, “அன்புள்ள அம்ராமே, நீர் முழு இரவும் இங்கேயே ஜெபித்துக் கொண்டிருக்கிறீரே, நீர் ஏன் அங்கே வேலை செய்து கொண்டிருக்கிற சில பையன்களிடத்தில் சொல்லி, அவர்களைக் கொஞ்சம் ஜெபிக்கும்படிச் செய்யக்கூடாது?” என்று கேட்டிருப்பாள். 57 “தேனே, பார், அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால் என்னவாகும்? யாராவது அதைச் செய்ய வேண்டுமே. யாராவது ஒருவர் இடைவிடாது ஜெபிக்க வேண்டும்”. 58 அந்தவிதமாகவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் இன்றிரவு உணர வேண்டும்; யாராவது ஒருவருக்காகக் காத்திருப்பது அல்ல, ஆனால் நாமே முன்சென்று, முழுமையாய் செயல்படுதல். நாம் வேதம் ஒரு சரித்திரமாயிருக்க வேண்டும் என்று விசுவாசிப்போமேயானால், அது கடைசி நாட்களில் மாறாத அதே தேவன் எழும்புவார் என்று கூறுகிற ஒரு தீர்க்கதரிசனப் புத்தகமாயுங்கூட உள்ளதே. இது அவர் காட்சியில் வருவதற்கான நேரமாய் உள்ளது. 59 அதைத்தான் அம்ராம் அறிந்திருந்தான். அதை மோசே தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்…இல்லை, மோசே அல்ல. என்னை மன்னிக்கவும். நாம் பெற்றுள்ள ஆதாரச் சான்றினைப் பொருத்தமட்டில் நானூறு வருடங்களாக ஒரு ஜெபத்திற்கு பதிலளிக்காதிருந்த இந்தச் சரித்திரத் தேவனால் ஆபிரகாமிற்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அவர்களை வெளியேக் கொண்டு வருவதாக ஒரு வாக்குப்பண்ணியிருந்தார். 60 நாம் நீண்ட காலமாக ஓர் அமைதியான தேவனை உடையவர்களாயிருந்தது போன்றே தோன்றிற்று, ஆனால் அவர் காட்சியில் எழும்பப்போகிற வேளையானது வந்துள்ளது. 61 ஓர் இரவு அம்ராம் ஜெபித்தபோது, ஒருகால் அநேக ஆண்டுகளாக ஜெபித்திருக்கலாம். அவருடையத் தலை முடி நரையாக மாறிக்கொண்டிருந்தது, விடுதலையே இல்லை, ஆனால் இன்னும் மோசமாகிக் கொண்டேயிருந்தது. ஓர் இரவு அவர் தான் மேற்கொண்ட கடமையிலிருந்தார். அதைத்தான் நாம் செய்ய வேண்டும்; மேற்கொண்ட கடமையிலிருக்க வேண்டும். அப்பொழுது அவர், “தேவனே, நீர் இதை வாக்குப்பண்ணினீர். நாங்கள் அதற்கு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். நாங்கள் இங்கே எல்லா அடையாளங்களும் இருப்பதையும், வேளையானது சமீபித்திருக்கிறதையும் காண்கிறோம். இது நீர் அதைக் குறித்து ஏதோ ஒன்றை செய்வதற்கான நேரமாய் இது உள்ளதே” என்றார். 62 அவர் முழு கவனத்தையும் ஒருங்கே ஒரு திசையில் செலுத்தினதான ஆழ்ந்த ஜெபத்தில் இருக்கையில், தன்னுடைய முழு இருதயத்தோடு ஜெபித்துக்கொண்டிருக்கையில், அப்பொழுது அவர் மூலையில் ஏதோ ஒன்று நிற்பதை நோக்கிப் பார்த்தார். அப்பொழுது அவர் தன்னுடையக் கண்களைத் தேய்த்து துடைத்துக்கொண்டு மீண்டும் நோக்கிப் பார்த்தார். அங்கே உருவின ஒரு பட்டயத்தோடு ஒரு தூதன் நின்றான். அப்பொழுது தூதனானவர், “விடுதலை வந்துகொண்டிருக்கிறது. நீர் இந்த உலகத்தில் ஒரு குமாரனைப் பிறப்பிக்கப் போகிறீர், அவனே அவர்களை விடுவிக்கப்போகிற ஒருவனாய் இருக்கப் போகிறான்” என்றார். பார்த்தீர்களா? 63 தேவன் எப்பொழுதுமே ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். அவர் பதிலளிக்கிறதில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்போமேயானால் நலமாயிருக்குமே! 64 மோசே, அவன் விசுவாசமுள்ளவனாய் இஸ்ரவேல் புத்திரரை வனாந்திரத்திற்குள்ளாக வழிநடத்தினபோது, அவன் சிவந்த சமுத்திரத்தண்டை வந்தான். மலைகள் ஒரு புறமிருக்க, வனாந்திரம் மற்றொரு பக்கமிருக்க, பார்வோனின் சேனையோ இந்த ஒரு வழியிலும், சிவந்த சமுத்திரமோ அவர்களுக்கு முன்பாகவும் இருந்தது. அவர்கள் ஒரு சிறு இடுக்கில் எதிர்பாராது வலையில் சிக்குண்டனர். இயற்கையும் கூட முறையிடுவது போன்றே தென்பட்டது. என்ன சம்பவிக்கப் போகிறது? அவர்கள் முடிவுற்ற நிலையிலிருந்தனர். பார்வோனின் சேனையோ இலட்சக் கணக்கானோரைக் கொண்டதாய் அவர்களண்டைக் குதிரைகளில் ஏறி வந்துகொண்டிருந்தனர். 65 ஆனால் ஜனங்கள் என்ன செய்தனர்? முறுமுறுக்கத் துவங்கி முறையிட்டனர். “ஓ, நாங்கள் முன்பிருந்த எங்களுடைய இடத்திலேயே தரித்திருந்தால் நலமாய் இருந்திருக்குமே.” 66 ஆனால் எந்த ஒரு கடினமான நேரத்திலும் காட்சியில் எழும்பக்கூடியச் சரித்திரப்பிரகாரமான தேவனை விசுவாசித்து, தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய விசுவாச சுவாலை எரிந்துகொண்டிருந்த ஒருவன் அந்த ஜனங்களுக்குள்ளே இருந்தான். மோசே தன்னுடையக் கரங்களை மேலே தேவனண்டை உயர்த்தியிருப்பதோடு, ஒரு சரித்திரத்தின் தேவன் ஒரு நிகழ்வேளையின் தேவனாயிருக்கும்படி காட்சியில் எழும்பும் வரையில் ஜெபித்தான். அப்பொழுது அவர் வழியைத் திறக்க, இஸ்ரவேலரோ தண்ணீரினூடாகக் கடந்து உலர்ந்தத் தரையிலே நடந்து சென்றனர். 67 ஓ, யோசுவா அதேக் குழுவினரை இல்லை அவர்களுடையப் பிள்ளைகளை யோர்தானண்டைக்கு வழிநடத்தியிருந்தது நெடுங் காலத்திற்குப் பின்னராயிருக்கவில்லை. அது ஏப்ரல் மாதமாயிருந்தது. அப்பொழுது முழுவதுமாய் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு, யோர்தானோ வழக்கமாய் இருப்பதைக் காட்டிலும் ஐந்து மடங்குத் தன்னுடைய அளவில் பெரிதாயிருக்கும். பார்க்கப்போனால் எந்த ஒரு நல்ல இராணுவத் தலைவனுமே அதிலிருந்து அவர்களை வேறுவிதமாக கொண்டு வந்திருப்பான். அதைக் கடப்பதற்கு அங்கே ஒரு சாத்தியமும் இல்லாதிருந்த நேரமாய் அது இருந்தது. ஆனால் யோசுவா நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சரித்திரத்தின் தேவன் ஒருவர் இருந்தார் என்பதையும், அவர் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தார் என்பதையும் நினைவுகூர்ந்து, அவன் அந்தத் தேவனை நோக்கி முறையிட்டான். அந்தத் தேவன் மகத்தான வல்லமையாய் இறங்கி வந்து, நிகழ்வேளையின் ஆபத்துகாலத் தேவனாகி, யோர்தானைப் பிளந்து, அவர்களைக் கடக்கப் பண்ணினார். 68 அது அநேக ஆண்டுகள் கழித்ததாயிருந்தது, அதாவது நம்முடையப் பாடப்பொருளின் வாசிப்பின்படி, இன்றிரவு நம்முடையப் பொருளின் வாசிப்பின்படி, எலிசா அந்தத் தேசத்தின் சாபத்தைக் கண்டிருந்து மலையின் மேலிருந்தபோது, நூற்றுக்கணக்கான வருடங்களாக இஸ்ரவேலில் ஜெபத்திற்குப் பதிலளிக்கப்படாமலேயிருந்தது. அதே சமயத்தில், எலிசா காட்சியில் வரக்கூடியச் சரித்திரத்தின் தேவன் ஒருவர் இருந்தார் என்பதை அறிந்திருந்தான். அப்பொழுது அவன் அவிசுவாசமுள்ள உலகமானது இந்தத் தேவனுடையச் சமூகத்தில் நின்று, அக்கினியினால் உத்தரவு அருளும் இந்த ஒருவரைப் பார்க்கும்படிக்கு சவாலிட்டான். அப்பொழுது அக்கினிச் சூளையிலிருந்து எபிரேயப் பிள்ளைகளைப் பாதுகாக்க முடிந்த தேவன் அக்கினியைக் கொண்டு வந்து பலியைப் பட்சித்துப்போட்டார். 69 அதற்குப்பின் இது நீண்ட காலத்திற்கு பின் அல்ல, அதாவது லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் மரித்திருந்தான். மரணத்தைக் காணாமல் ஏனோக்கை வீட்டிற்கு எடுத்துக் கொள்ள முடிந்த, ஓர் அக்கினி இரதத்தில் எலியாவை எடுத்துக்கொள்ள முடிந்தவராய் ஜீவித்திருந்த ஒரு தேவன் இருந்தார். அப்பொழுது அவர் அந்த அந்தகார மரண வேளையில் காட்சியில் அழைக்கப்பட்டார். அவர் எல்லா நேரத்திலும் செயல்படும் விதமாகவே செயல்பட்டார். அதே சமயத்தில் அவர் ஒரு சரித்திரத்தின் தேவனாயிருந்தார், ஆனால் சரித்திரத்திலிருந்து ஒரு நிகழ்கால ஆபத்தான நிலைக்காக எழுப்பப்பட்டார். 70 எரிகோவின் வாசல் அருகே ஒரு குருடான மனிதன் சாலையோரத்தில் அமர்ந்து கதறிக்கொண்டிருந்தான். எல்லா நம்பிக்கைகளுமே அற்றுப்போயிருந்தன. மருத்துவர்களால் அவனுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாமலிருந்தது. அவனுடையப் பணமும் செலவழிந்துப் போயிற்று. மரணம் ஓர் இனிமையான நிவாரணமாய் இருக்கும் வரையில் அங்கே அமர்ந்து ஒரு சில நாட்கள் கனவு காண்பதைத் தவிர வேறொன்றுமே அவனுக்காக விடப்பட்டிருக்கவில்லை. ஒரு நாள் சாலையில் சரித்திரத்தின் தேவன் ஒருவர் ஒரு நிகழ்வேளையின் நெருக்கடி நேரத்தில் காட்சியில் வந்தார். தேவன் குருடனின் கண்களைத் திறந்தார். 71 யவீருவின் வீட்டில் மருத்துவர்கள் தவறியிருந்தபோது, அந்தச் சிறு பெண் மரிக்கும்படியாய் விடப்பட்டிருந்தாள். மரணமானது வந்து, அதனுடையக் கசப்பான உயிர்ப்பலியை எடுத்துக் கொண்டது, ஒரே பிள்ளையாயிருந்ததையே எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டிலே பன்னிரண்டு வயதானச் சிறு பெண் அவளுடைய ஒரு படுக்கையின் மேல் நீட்டிக் கிடத்தப்பட்டிருந்தாள். அப்பொழுது நொறுங்குண்ட இருதயங்கொண்ட ஒரு சிறு பிரசங்கியார் தன்னுடைய ஸ்தாபனத்தையும், தன்னுடைய எல்லா நண்பர்களையும் விட்டுவிட வேண்டியதாயிருந்தது. ஆனால் மரித்தோரை எழுப்பப்க்கூடியச் சரித்திரத்தின் தேவன் ஒருவர் இருந்தார் என்பதை அவன் நினைவு கூர்ந்தான். அவன் அவரைக் கண்டறியப் புறப்பட்டுச் சென்றான். 72 “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” அவர் இன்றைக்கும் அதே மாறாதத் தேவனாயிருக்கிறார். 73 இந்தத் தேவன், தேவ குமாரனாகிய இயேசு என்றழைக்கப்படும் ஒரு சரீரத்தில் வாசம்செய்பவர், அவர் காட்சியில் அழைக்கப்பட்டபோது, சரித்திரத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டபோது, பழைய ஏற்பாட்டில் மரித்தோரை எழுப்ப முடிந்த தேவன் ஒரு தீர்க்கதரிசியின் மூலமாக ஒரு மரித்தக் குழந்தைக்கு ஜீவனைத் திரும்பக் கொண்டு வந்தார். அந்தத் தேவன் மரிக்க முடியாது. அவர் நித்தியத்திற்கானத் தேவனாயிருக்கிறார். 74 அந்தக் குழந்தை அங்கே படுக்கையில் நீட்டப்பட்டு படுத்துக்கிடந்தது. யவீரு, சூனேமியாள் அவளுடையப் பிள்ளையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதை அறிந்தவனாய், அவன், “அந்தச் சரித்திரத்தின் தேவன், அவர் செய்கைக்குள்ளாகும்படிக்கு அழைக்கப்படக் கூடுமானால் நலமாயிருக்குமே, அவர் இன்றைக்கும் அதே மாறாத தேவனாயிருக்கிறாரே” என்றான். முழுவதுமாய் ஆராய்ந்து, வல்லமையை உடையவராக உரிமைக்கோரப்பட்ட மனிதரை—அந்த மனிதரைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அது எல்லோருமே வெறுத்திருந்த நசரேயனாகிய இயேசுவாயிருந்தது. ஆனால் அவன் அவரைக் காட்சியில் அழைத்தான், ஏனென்றால் அவர் ஜீவனுள்ள தேவனாகிய ஒரே தேவனாய், அந்த நாளில் தேவனைக் குறித்துக் கண்டறியக் கூடிய மிக நெருங்கின பிரதிநிதியாயிருந்தார். அவர் காட்சியிலே அழைக்கப்பட்டபோது, சரித்திரப் பிரகாரமானத் தேவன் அழைக்கப்பட்டபோது, அவர் மரித்துப்போன குழந்தையின் பேரில் எலியாவினிடத்தில் பேசினபோது, அவர் செய்தவிதமாக அவர் செயல்பட்டார். 75 நான் இன்றைக்கு இன்னும் அதிகமாகக் கூறுவேனாக, என்னுடைய சகோதரனே, சகோதரியே இந்தத் தற்போதைய ஆபத்தான நிலையில், புற்றுநோயானது உலகத்தைத் தின்றுகொண்டிருக்கிறபோது, எல்லாவிதமான வியாதிகளும் உள்ளபோது, குஷ்டரோகியைச் சுகப்படுத்தின அதே சரித்திரப் பிரகாரமானத் தேவன், வியாதியஸ்தரைச் சுகப்படுத்தினவர், மரித்தோரை எழுப்பினவர் இன்றைக்கும் அதே மாறாத தேவனாயிருக்கிறார். அவரோத் தம்முடைய ஜனங்கள் தம்மைச் செயல்புரியும்படிக்கு காட்சியில் அழைக்க ஆவலாய்க் காத்துக் கொண்டிருக்கிறார். 76 ஒரே நாளில் ஏழு முறை விபச்சாரம் செய்ததற்காக ஒரு வேசியை மன்னிக்க முடிந்த ஒருவர், மிகவும் இழிவானப் பாவியைச் சுத்தப்படுத்த முடிந்தவர், அவர்களை ஒரு லீலி புஷ்பத்தைப் போன்று வெண்மையாக்குகிறவர், அதே மாறாத சரித்திரத்தின் தேவனானவர் கறைபடுத்தப்பட்ட ஒவ்வொரு பாவ மற்றும் அவிசுவாசமுள்ள இருதயத்தைச் சுத்தப்படுத்த இன்றைக்கும் ஜீவிக்கிறார். 77 ஒரு நாள் காக்காய்வலிப்புக் கொண்ட ஒரு பையனை உடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் இவனைச் சபைக்குக் கொண்டு சென்றான். சீஷர்களோ கொஞ்சநேரம் அவனைச் சுற்றி நடனமாடி, சத்தமிட்டும் எந்த நன்மையும் செய்ய முடியாதிருந்தது. ஆனால் ஜீவனோடிருந்த ஒரு சரித்திரத்தின் தேவன் முன்பிருந்தது போலவே அங்கிருந்தார். அவன் அவரைக் கண்டறியும்படியாய் தீர்மானங்கொண்டான். அப்பொழுது தூர மலையிலிருந்து அவர் வருகிறதைக் கண்டு, அவன் அவரண்டை ஓடி, “ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும். ஒரு பிசாசு என் பிள்ளையைப் பிடித்திருக்கிறது, அது அவனை அலைக்கழித்து, தீயில் விழச்செய்கிறது” என்றான். 78 இயேசுவோ, “நீ விசுவாசிப்பாயானால், என்னால் முடியும்” என்றார். என்னவென்று நீ விசுவாசித்தால், சரித்திரத்தின் தேவன் இன்னமும் ஜீவிக்கிறார் என்று நீ விசுவாசித்தால். அவரோ காட்சியில் அழைக்கப்பட்டார். காக்காய் வலிப்போ அந்தப் பிள்ளையை விட்டு நீங்கிப் போயிற்று. 79 அதே மாறா தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார்; சபைகள் தவறியிருக்கிறபோதும், அரசியல் தவறியிருக்கிறபோதும், எல்லாக் காரியமும் தவறியிருக்கிறபோதும், மனிதன் தவறியிருக்கிறபோதும் இப்படியாக ஒவ்வொருக் காரியமும் தவறியிருக்கிறது. தேவனால் தவறிப்போக முடியாது. அவர் இந்தப் பண்டைய கருப்புநிற ஆதாரங்கொண்ட வேதாகமத்தின் ஒரே தேவனாயிருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் உண்மையாய் இருந்ததுப் போலவே அப்படியே இப்பொழுதும் உண்மையாய் இருக்கிறது. இது அவருடைய ஜனங்கள் அழைத்து, சரித்திரத்திலிருந்து அவரை உயர்த்தின நேரமாய் உள்ளது. ஏனென்றால், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனாயிருக்கிறார். அவர் ஒரு நிகழ்காலத்தின் தேவனாயுமிருக்கிறார். 80 அவர், “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமானப் பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். 81 அது ஒரு சரித்திரப்பிரகாரமான தேவன் அளித்த வாக்குத்தத்தமாய் இருந்தது. நாம் இன்றைய அவருடைய மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். நாம் அவருடைய மந்தையின் ஆடுகளாயிருக்கிறோம். நாம் நின்று அவரைக் காட்சியில் அழைக்க அவர் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவரைக் காட்சியில் அழையுங்கள். அவர் செயல்பாடுகளுக்குள் செல்வதைக் கவனியுங்கள். அவர் முதன்மையானதைச் செய்வதைக் கவனியுங்கள். மனிதர் வியப்படையும் காரியத்தை அவர் செய்ய, அவர்களோ தங்களுடையத் தலைகளைச் சொரிந்துகொண்டு, அதைப் புரிந்து கொள்ளாமலிருக்கிறதைக் கவனியுங்கள். அவர் ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனாயும், தற்போதைய நாளின் தேவனாயுமிருக்கிறார். அவர் சரித்திரத்திலிருந்து வெளியே அழைக்கப்பட வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கிறார். 82 அவர் ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனாய் மாத்திரம் இருப்பாரேயானால், ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவன் நமக்கு என்ன நன்மையைச் செய்கிறார்? அப்படியானால் நாம் அவரை நோக்கிப் பாராமலிருப்போமாக. ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவன் அம்ராமுக்கும், யோகபேத்துக்கும் என்ன நன்மையைச் செய்திருந்திருப்பார்? ஒரு சரித்திரப் பிரகாரமானத் தேவன் மோசேக்கு என்ன நன்மையைச் செய்திருந்திருப்பார்? ஒரு சரித்திரப் பிரகாரமானத் தேவன் லாசருவுக்கு என்ன நன்மையை செய்திருந்திருப்பார்? ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவன் குருடனானப் பர்திமேயுவிற்கு வாசலண்டை என்ன நன்மையைச் (செய்திருந்திருப்பார்?) அவர் இன்றைக்கு மாறாதவராயில்லையென்றால், ஒரு சரித்திரப் பிரகாரமானத் தேவன் இன்றிரவு உங்களுக்கு என்ன நன்மையைச் செய்வார்? 83 அவர் இன்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். அவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்து, நம்முடைய எல்லா நோய்களையும் குணமாக்குகிறார். சரித்திரப்பிரகாரமானத் தேவன் சரித்திரத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார். அவர் இந்த வெளிச்சத்தின் நாளில் பிரகாசிப்பார். என்ன? காலம் முடிவுற்றுக் கொண்டிருக்கும்போது, அரசியல் முடிவுற்றுக்கொண்டிருக்கும்போது, வாழ்க்கை முடிவுற்றுக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு காரியமும் முடிவிற்கு வந்துகொண்டிருக்கும்போது இயேசுவோ ஒளியினிடத்திற்கு வருகிறார். ஒவ்வொருக் காரியமும் அதனுடைய அழிவுக்கான தீர்ப்பைச் சந்திக்கும்போது, அவரோ இன்னமும், “பள்ளத்தாக்கின் லீலியாய், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாய்” பிரகாசிக்கிறார். 84 அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனைக் கூப்பிடுங்கள், அப்பொழுது அவர் ஒரு நிகழ்காலத் தேவனாய் மாறுவதையும், அவர் அப்பொழுது செய்ததுப் போன்றே அப்படியேப் பிரகாசிக்க சரித்திரத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு உயர்த்தப்படுவதையும் கவனியுங்கள். அவர் அதேவிதமாகச் செயல்படுவார். அவர் அதையேச் செய்வார். அவர் அதே விதமாக மன்னிப்பார். அவர் அதேவிதமாக குணப்படுத்துவார். அவருடைய இரக்கங்கள் மாறாததாயிருக்கின்றன. அவருடைய மனவிருப்பம் மாறாததாயிருக்கிறது. அவருடைய வல்லமை மாறாததாயிருக்கிறது. அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் நமக்காக…காத்துக் கொண்டிருக்கிறார்… 85 நீங்கள் உங்களுடைய உதடுகளினால் அவரை அழைக்க முடியாது. அவர் உங்களுடையப் போலி வழிபாட்டின் மூலம் வருகிறதில்லை. அவர் விசுவாசத்தினாலே வருகிறார். உங்களுடைய நீண்ட ஜெபத்தினால் அல்ல, உங்களுடைய மனவெழுச்சியினால் அல்ல, உங்களுடைய விசுவாசத்தின் போதேயாகும். 86 ஆனால் அவர் அந்தச் சிறிய உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்தில் இருக்கின்ற மங்கலான விசுவாசத்தின் மூலமே வருகிறார், அதுவே உறுதியாகப் பற்றிக்கொண்டு, “அந்தச் சிறு காரியமாய் இருந்து வருகிறதே, அதுவே என்னை இன்றிரவு இந்தக் கூடாரத்திற்குக் கொண்டு வந்தது, அதுவே என்னுடைய ஆத்துமாவிற்கு புதிதாக ஒளியூட்டக்கூடியது, அதுவே கொழுந்துவிட்டு எரிகிற ஒன்றாய், ஆகாயத்தில் உள்ளப் பறவைகளைப் போலப் பாடிக்கொண்டே இங்கிருந்து என்னை அனுப்பக் கூடியதாயிருக்கிறது” என்றுக் கூறக்கூடியது. ஏன்? அவர் ஒரு சரித்திரப்பிரகாரமானத் தேவனாயும், ஒரு நிகழ்கால நாளின் தேவனாயுமிருக்கிறார். அவர் கூப்பிடும்படியாய்க் காத்துக் கொண்டிருக்கிறார். கர்த்தரைக் கூப்பிடுங்கள். அவர் உங்களுக்குச் செவிக் கொடுப்பார். சங்கீதத்தில் அவரண்டைப் பேசுங்கள். அவரண்டை ஜெபித்து, அவரை விசுவாசியுங்கள். அவர் பதிலளிப்பார். 87 முடிக்கையில் நான் இந்த வார்த்தைகளைக் கூறுகிறேன், அந்தக் காரணத்தினால் தான் இன்றிரவு இந்தக் கூட்டம் உள்ளது. அந்தக் காரணத்தினால் தான் இந்தக் கூட்டம் துவங்கியிருக்கிறது. நாம் அங்கே இந்த மூலைக்கல்லை நாட்டினபோது, நான் உலகத்தைச் சுற்றிலும் சுவிஷேசத்தைப் பிரசங்கிப்பேன் என்று தேவன் என்னிடத்தில் இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்னரே கூறினார் என்று நான் நம்புகிறேன். அவர் அதை நிறைவேற்றினார். அவர்களோ, “பில்லி, உன்னுடைய ஏழாம் வகுப்பு வரையிலான கல்வியைக் கொண்டு நீ எங்கே போகப் போகிறாய்?” என்றுக் கூறி நகைத்தனர். அபொழுது நானோ, “நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் போகிறேன்” என்றேன். 88 நான் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரசங்க பீடத்தில் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் என்னுடையப் பிரசங்கத்தைப் பிரசங்கித்தபோது, திருமதி. கெர்டி (Gertie) அங்கு அமர்ந்து, நம்பிடுவாய் என்ற அந்தப் பாடலைப் பாடினார். தாவீதும் கோலியாத்தும் என்பதன் பேரில் நான் பிரசங்கித்ததுபோல அதோ பெரிய இராட்சதன் அங்கே நின்றான். விஞ்ஞானமும் மகத்தான நன்கு அறிந்த உலகமும் தெய்வீகச் சுகமளித்தலை இகழ்ந்துரைத்து, அதை அவமானப்படுத்தினது. ஒவ்வொருவரும் என்னிடத்தில், “பையனே, நீ அங்கே சிதறுண்டுப் போவாய். அவர்கள் உன்னை சிறையில் தூக்கிப் போடுவார்கள். அவர்கள் இதை, அதை அல்லது மற்றதைச் செய்வார்கள்” என்றுக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கோ சரித்திரத்தின் தேவன் காட்சியில் வந்து, அதைச் செய்யும்படி என்னிடம் கூறினார். நான் அவருடையக் கிருபையினாலும். அவருடைய இரக்கத்தினாலும் அதைச் செய்தேன். சரித்திரமாயிருந்த அந்த மாறாத தேவன் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மீண்டும் காட்சியில் எழும்பியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்றினது போலவே அவ்வளவு நிச்சயமாக அவர் இதை நிறைவேற்றுவார். அவர் சரித்திரத்தின் தேவனாயிருக்கிறார். அவர் தற்போதைய நாளின் தேவனாயுமிருக்கிறார். அவர் ஒருபோதும் உறங்குவதுமில்லை அல்லது தூங்குவதுமில்லை. அவர் மரிக்க முடியாது, ஏனென்றால் அவருக்கு துவக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. 89 இன்றிரவு பாவியான நண்பனே உங்களுடையக் காரியத்தில், உங்களுடைய இருதயத்தைச் சுற்றிலும் உள்ள அந்தச் சிறு மெய்சிலிர்க்கச் செய்யும் உணர்வானது அவர் மாறாதவராயிக்கிறார் என்று உங்களுக்குக் கூறுகிறது, அதாவது அவர் உங்களை ஒவ்வொரு பாரத்திலிருந்தும், ஒவ்வொரு குற்றத்திலிருந்தும், அவருக்கு விரோதமாக நீங்கள் செய்திருக்கிற ஒவ்வொரு பாவத்திலிருந்தும் விடுதலையாக்க முடியும் என்று உங்களிடத்தில் கூறுகிறதே. 90 நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை எதில் வைக்க முடியும்? உங்களுடையச் சொந்த வீட்டில் வைக்க முடியாதே, உங்களுடைய மனைவியினிடத்திலும் வைக்க முடியாதே, உங்களுடைய குடும்பத்திலும், தாய் அல்லது தந்தையினிடத்திலும் வைக்க முடியாதே. என் நம்பிக்கைகள் நீதியோடுள்ள இயேசுவின் இரத்தத்தின் மேலேயல்லாமல் வேறொன்றின் மேலும் கட்டப்பட்டிருக்கவில்லை, என் ஆத்துமாவைச் சுற்றியுள்ள யாவும் விலகிச் செல்லும்போது, அப்பொழுது அவரே என் எல்லா நம்பிக்கையும், உறைவிடமுமாயிருக்கிறார். கிறிஸ்துவின் மேல், அந்தத் திடமானப் பாறையின்மேல் நாம் நிற்கிறோம்; மற்றெல்லா நிலங்களுமே அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலாயுள்ளது. 91 சபை நண்பனே, அது என்னவாயிருந்தாலும், அவையாயும் முடிவிற்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் என்றென்றைக்குமாய் ஜீவிக்கிறார். அவர் ஜீவிக்கின்றபடியால் நாமும் அவரோடு ஜீவிக்கிறோம். 92 நீ இதற்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பாய்? உன்னால் என்ன கொடுக்க முடியும்? நியாயத்தீர்ப்பிலே பதில் கூற தேவன் உன்னை இன்றிரவு அழைத்திருப்பாரேயானால் என்னவாகும்? அதைக் குறித்து நீ என்ன செய்வாய்? நீ உன்னுடைய நம்பிக்கைகளை தேசத்தில் வைத்திருக்கிறாயா? அதுவும் மற்றெல்லாவற்றையும் போல உடைந்துகொண்டிருக்கிறது. உன்னுடைய நம்பிக்கைகளை வரப்போகின்ற ஒரு குறிப்பிட்டத் தேர்தல்களின் மேல் வைத்திருக்கிறாயா? அவர்கள் மனிதர்கள், நான் அவர்களுக்கு விரோதமாக ஒன்றையுங் கூறவில்லை. ஆனால் அவர்கள் அழிவுள்ளவர்கள், விட்டுவிட்டுச் செல்லப்போகிறவர்கள். நீ உன்னுடைய நம்பிக்கைகளை எந்தக் காரியத்திலுமே வைக்க முடியாது, அது பிடிபடப்போகிறது. ஆனால் வாக்களித்துள்ளச் சரித்திரத்தின் தேவனே, அவரே எழுப்புவார். என்றோ ஆசீர்வதிக்கப்பட்ட நாளில்… 93 அவர்கள் உன்னை அதோ கண்ணுக்கெட்டியத் தொலைவிலே கொண்டுச் செல்ல, சவ அடக்கம் செய்பவர் உன் மீது மண்ணைக் கொட்டலாம். ஆனால் மேலே தூக்கியெடுப்பவரோ இந்நாட்களில் ஒன்றில் வருவார். சவ அடக்கம் செய்வோர் உன்னை கீழேக் கொண்டு செல்வர், ஆனால் மேலே தூக்கியெடுப்பவரோ நிச்சயமாக உன்னை மேலே தூக்கியெடுப்பார். “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைத் தேவன் வரும்போது அவரோடேகூடக் கொண்டு வருவார்”. ஏனென்றால் அநேகருக்கு இப்பொழுது அவர் ஒரு சரித்திரத்தின் தேவனாயிருக்கிறார். ஆனால் நீங்கள் அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் உண்மையாய் அவரைக் கண்டறியும்போது, அவர் ஒரு தற்போதைய நாளின் தேவனாயிருப்பார். அதை உங்களுக்குச் சொல்லுகிற ஏதோ ஒரு காரியம் உங்களுக்குள்ளாக இருக்கும். நீங்கள் உணர்ச்சிவசப்படாமலிருக்கலாம். நீங்கள் அழாமலிருக்கலாம். நீங்கள் அந்நியப் பாஷைகளில் பேசாமலிருக்கலாம். நீங்கள் ஓடாமலிருக்கலாம். நீங்கள் சத்தமிடாமலிருக்கலாம். ஆனால் ஏதோ காரியம் சம்பவிக்கும், அதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஏதோக் காரியம் சம்பவத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் உயிரோடிருக்கும் வரைக்கும் உங்களுடைய ஜீவியம் சரியாக அதனோடு ஒத்திசைந்துப்போம். கடைசி வேளையானது வருகிறபோது, நீங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது, நீங்கள் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டீர்கள். “நீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும், அவைகள் என்னைத் தேற்றும்”. மருத்துவர் உங்களைக் கைவிட்டுவிட்டு, நடந்து சென்றுவிட்டப் பிறகு, நரம்புகளோ குளிர்ந்துபோய்க் காணப்படுகிறதாயிருந்து கொண்டிருக்கும். 94 திரு. வாடர் (Vauder) அவர்களைப் போல, அன்றொரு இரவு நம்முடையப் புகழ்வாய்ந்த இங்கேயுள்ள இந்த நகரத்தின் முன்னாள் பெரு நகராண்மைக் கழகத் தலைவர் அவர்கள் திரு. நிக்சன் அவர்கள் பேசுவதைக் கேட்கச் சென்று அங்கேயே அந்த இடத்திலேயே மரித்துப் போய்விட்டார். என்னைப் பொருத்தமட்டில் அவர் நல்ல ஆரோக்கியமான மனிதன். 95 நான் வீட்டிலிருந்துத் தூரமாய் சென்றுவிட்டு, திரும்பி வந்தபோது, என்னுடைய மனைவி, “பில்லி, இன்னார்—இன்னார் மரித்துப்போய்விட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். 96 அன்றொரு நாள் என்னுடையச் சிறுப் பெண்ணோடு வியாழக் கிழமை பள்ளியில் அமர்ந்திருந்த ஒரு சிறுப் பெண்ணை, அவளை ஞாயிற்றுக் கிழமை, அவர்கள் அடக்கம்பண்ணினர். சளிக்காய்ச்சல் பிடித்துக் கொண்டது. அது அவளுடைய இருதயத்திலோ அல்லது வெறெங்கோப் பரவிட்டது. அது (அவளை) கொன்றுபோட்டது. அவள் மரித்துப் போய்விட்டாள். 97 இங்குள்ள என்னுடைய நண்பர் ஒருவர் திருமதி.வில்லியம்ஸ், பக் வில்லியம்ஸ் அவர்களின் மனைவி, எனக்கு அவரை அநேக ஆண்டுகளாகவேத் தெரியும். இங்குள்ள சீலா பேரேக்மன், அவள் இங்கேக் கட்டிடத்தில் எங்கோ இருக்கிறாள். அது அவளுடையச் சகோதரி, அதாவது அநேக ஆண்டுகளாக நாங்கள் அந்தத் தெருவின் பக்கத்தில் வசித்தபோது, இங்கே பக்கத்து வீட்டில் வசித்து வந்தவள். போய்விட்டாள்; அவள் சற்று நரம்புக் கோளாறுடையவளாய் இருந்து வந்தாள், ஆனால் நான் திரும்பி வந்தபோதோ, அவள் மரித்துப் போய்விட்டிருந்தாள். 98 அது என்னவென்றுப் பார்த்தீர்களா? ஏதோ ஒரு சமயத்தில் நீங்கள் அதைச் சந்திக்கப் போகிறீர்கள் என்பதாய் அது உள்ளது. எல்லா பணத்தையும் நீங்கள் ஒன்றுதிரட்ட முடியும், எல்லா நண்பர்களையும் நீங்கள் ஒன்று கூட்ட முடியும்…அவைகள் சரிதான். ஆனால் அவை யாவுமே, அது இரண்டாந்தரமாய் இருக்கட்டும். ஒரு சரித்திரத்தின் தேவனை விசுவாசியுங்கள், அதாவது அவர் தற்போதைய நாளின் தேவனாயும், அப்படியே மாறாதவராயும் இருக்கிறபடியால், அவர் உங்களுக்காக என்ன செய்வார் என்றுப் பாருங்கள். 99 சுகவீனமாயும், தேவையுள்ளவர்களுமாயிருக்கிற உங்களை மருத்துவர் கைவிட்டுவிட்டிருக்க, உங்களுக்காக இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாமலிருக்கலாம். நினைவிருக்கட்டும், சரித்திரத்தின் தேவன் இன்றைக்கும் மாறாதத் தேவனாயிருக்கிறார். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் அப்படியே இப்பொழுது சற்று நேரம் ஜெபம் செய்வோமாக. 100 இன்றிரவு அவர்கள் இங்கு இருப்பார்களாயின்…எனக்குத் தெரியாது. இன்றிரவு இங்குள்ளவர்கள் உங்களுடைய ஆத்தும இரட்சிப்பை அறிந்திருப்பீர்களாயின், தேவன் ஒரு நொடிப்பொழுதிலே, ஓர் இமைப்பொழுதிலே, நீங்கள் நினையாத நேரத்தில் வருவதாக வாக்களித்திருப்பாரேயானால், அப்பொழுது நீங்கள் அவரில்லாமலிருந்தால், நீங்கள் அவரை உடையவராயிருக்க வேண்டும் என்பதைச் சற்று நீங்கள் யூகித்துப் பாருங்கள். நினைவிருக்கட்டும். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்”. இன்றிரவு நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற நிச்சயமில்லாதவர்களாய் நீங்கள் இருந்தால், அவர் வரும்போது, நீங்கள் அவரோடுச் செல்ல வேண்டுமானால், நீங்கள் உங்களுடையக் கரத்தை இந்த அளவில் அப்படியே அவருக்கு உயர்த்தி, அதன் மூலம், “தேவனே, என்னண்டை இரக்கமாயிரும்” என்றுக் கூறுங்கள். உங்களுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேகக் கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன. நாம் முடிப்பதற்கு முன்னர் வேறு யாரேனும் இருப்பார்களா? நீங்கள்…ஜெப செய்யுங்கள். வாலிபப் பெண்மணியேத் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வெட்கப்படாதீர்கள். நிச்சயமாக. 101 அவர் இன்றைக்கு மாறாதத் தேவனாய் இல்லாமலிருந்தால், அப்பொழுது ஒரு சரித்திரத்தின் தேவனைப் பிரசங்கிப்பது என்ன நன்மையைச் செய்யும்? சகோதரனே, சகோதரியே, நான் இதைக் கூறுகிறேன். நான் ஒரு சமயம் ஒரு சரித்திரத்தின் தேவனைக் குறித்து வாசித்தேன். நான் அவரைக் குறித்துப் புத்தகங்களில் வாசித்தேன். நான் அவரைக் குறித்து வேதாகமத்தில் வாசித்தேன். ஆனால் ஒரு நாள் நான் அவரைச் சந்தித்தேன். நான் அவரை சந்தித்தேன். அவர் என்னுடனே வந்தார். அவர் என்னைக் குடிக்க வேண்டாம் என்றும், புகைக்க வேண்டாம் என்றும், என்னை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும், எனக்கு வயதாகும்போது, நான் செய்ய வேண்டியதற்கான ஏதோ ஒரு காரியத்தை அவர் உடையவராயிருப்பதாகவும் என்னிடத்தில் கூறினார். அப்பொழுது நான் வெறுமனே ஒரு சிறு பையனாய் இருந்தேன். அவர்—அவர் அதை நிரூபித்துவிட்டார். அவர் அதைச் செய்தார். இதோ அவருடையப் புகைப்படம் இப்பொழுது இங்கே தொங்கிக்கொண்டிருக்கிறதே, விஞ்ஞானம் அதைப் புகைப்படம் எடுத்துள்ளது. பார்த்தீர்களா? உலகம் அதை அறிந்திருக்கிறது. அவர் அதை உங்களுக்கு மத்தியிலே நிரூபித்திருக்கிறார். உங்கள் இருதயத்தில் உள்ள ஒவ்வொரு நினைவையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் தம்மைத்தாமே நிரூபித்திருக்கிறார். அவர் இன்றைக்கும் அதே மாறாதத் தேவனாயிருக்கிறார். அவர் ஒரு சரித்திரத்தின் தேவனாயிருக்கவில்லை. 102 உலகமானது உங்களை உலகத்தின் கறையினாலும், இழிபொருளினாலும் கள்ளத்தனமாகக் கடத்த…அனுமதிக்காதீர்கள். சரியாக அவரை விசுவாசியுங்கள்…[ஒலிநாடாவில் இடம்—ஆசி.] நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களா? உயர்த்தாதிருக்கிற சிலர் உங்களுடையக் கர்த்தை உயர்த்தி, “தேவனே, நான் அதைக் குறித்து நிச்சயமுடையவனாயிருக்கவில்லை, ஆனால் நான் நிச்சயமுடையவனாய் இருக்க விரும்புகிறேன். என்னை…” என்றுக் கூறுங்கள். 103 வாலிப மனிதனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு எவரேனும்? அங்கே பின்னால் உள்ள சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேற எவரேனும் உண்டா? சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்குள்ள சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. 104 நீங்களோ, “சகோதரன் பில், என்னுடையக் கரத்தை மேலே உயர்த்தியிருப்பது, எனக்கு ஏதாவது காரியத்தைப் பொருட்படுத்துமா?” என்றுக் கேட்கலாம். நீங்கள் உங்களுடையக் கரத்தை ஒருமுறை உயர்த்துங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். சகோதரனே, சகோதரியே, நீங்கள் எப்பொழுதாவது எந்தக் காரியத்தையாவது சரியாகச் செய்யும்போது, நீங்கள் அதைக் குறித்து நல்லபடியாகவே உணருகிறீர்கள். 105 நேர்மையாயிருங்கள். இப்பொழுது தேவனண்டைப் பொய் சொல்லாதீர்கள். நீங்கள் தேவனிடத்தில் பொய்யுரைத்துக் கொண்டிருக்கவில்லை. அவருக்குத் தெரியும். நீங்கள் உங்களுக்கே பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பொய் என்பது அப்படிப்பட்ட ஒரு பயங்கரமானக் காரியமாய் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் உங்களைக் கூட்டரசின் மைய அமைப்பு நீதிமன்றங்களுக்கும், குற்றப்பிரிவு தண்டனைக்குரிய நீதிமன்றங்களுக்குக் கொண்டு சென்று உங்களுடையக் கரத்தின்மேல் பொய் சொல்வதைத் துப்பறிந்துக் கண்டறியும் கருவியைப் பொருத்தினால், நீங்கள் எவ்வளவுதான் அந்தக் காரியத்தை உங்களால் முடிந்தளவு சிறந்த முறையில் கூற முயன்றாலும், அதை உண்மைப்போல் தொனிக்கச் செய்தாலும், நீங்கள் கூறிக்கொண்டிருப்பது ஒரு பொய் என்பதை உங்களுடைய நரம்புகள் நிரூபிக்கும். ஏன்? நீங்கள் பொய்யுரைக்க உண்டாக்கப்படவில்லை. பொய்யினை துப்பறிந்துக் கண்டறியும் ஒரு கருவியே அதை அறிந்திருக்குமேயானால், தேவனைக் குறித்து என்ன? 106 நீங்களோ, “ஆனால் சகோதரனே, நான் ஒரு பாப்டிஸ்டு, நான் பிரஸ்பிடேரியன், நான் மெத்தோடிஸ்டு”, என்றுக் கூறலாம், அது சரிதான். 107 நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்பொழுதாவது இந்தச் சரித்திரத்தின் தேவனைச் சந்தித்திருக்கிறீர்களா? அவர் உங்களுக்கு முன்பாக எரிகின்ற முட்செடியில் நின்றிருக்கிறாரா? நீங்கள் அறிவீர்களா? அவர் உங்களுடையப் ஆத்துமாவினிடத்தில் திரும்பிப் பேசினதையும், உங்களுடையப் பாவங்கள் போய்விட்டதையும் நீங்கள் அறிவீர்களா? அதை அவ்வண்ணமாய் அறிந்திருக்கவில்லையென்றால், நீங்கள் வெறுமெனச் சபையைச் சேர்ந்துகொள்ளுதலையோ, அல்லது அங்கே சென்றதையோ, அதைக் குறித்து சற்று நலமாக உணர்ந்ததையோ ஒரு பாக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் அவரை அறிந்துகொள்ள வேண்டும். அவரைக் குறித்து கேள்விப்படுவதல்ல, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது ஜீவன் அல்ல. ஆனால் அவரை அறிந்துகொள்வதே ஜீவனாயிருக்கிறது. அவரை அறிந்து கொள்வது, தனிப்பட்ட முறையில் அவரை அறிந்துகொள்வதேயாகும்; அவரை தனிப்பட்ட பிரதிபெயர், அவரை அறிந்துகொள்ளுங்கள். அவருடையப் புத்தகத்தை அறிந்து கொள்வதல்ல, ஒரு நல்ல மாணாக்கனாய் இருப்பதல்ல, ஒரு நல்ல அங்கத்தினராய் இருப்பது அல்ல அல்லது ஒரு நல்ல மனிதனாய் அல்லது ஒரு நல்ல பெண்மணியாய் இருப்பதல்ல. அது இதைச் செய்கிறதில்லை; நியாயப்பிரமாணம் அதைச் செய்தது. ஆனால் அவரை அறிந்துகொள்ளுதலே! நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்களா? எரிகிற முட்செடியில் மோசேயினிடத்தில் பேசின அந்தத் தேவன் உங்களுக்கு முன்பாக வந்திருக்கிறாரா? அது அவர்தான் என்று நீங்கள் அறிந்துகொள்ளுமளவிற்கு அவர் உங்களிடத்தில் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவர் பேசியிருக்கவில்லையென்றால், அப்படியே உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “தேவனே, இப்பொழுது என்னிடத்தில் பேசும். என்னுடைய இருதயத்தைச் சுற்றி முனகிக்கொண்டிருக்கிறது நீர்தானா? நான்—நான் உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றுக் கூறுங்கள். 108 வாலிபப் பெண்மனியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் உள்ள உங்களைத் தேவன் ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. அது சரி. அறிந்து கொள்ளாமலிருக்கிற எவரேனும். அது சரி. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள வாலிபப் பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. இங்குள்ள குட்டிப் பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 109 இப்பொழுது உங்களுடையத் தலைகள் வணங்கியிருப்பதோடு உண்மையாகவே அமைதியாய் மென்மையாய் வாய் திறவாமல் மௌனமாய் அதைப் பாடுங்கள். என்றோ ஓர் ஒளிமயமான விடியலில், இயேசு வருவார்; என்றோ ஓர் ஒளிமயமான யுத்தங்கள் யாவுமே வெற்றிச்சிறந்திருக்கும், நாம் ஜெயத்தை ஆர்ப்பரித்து, நீலவானத்தினூடாகச் செல்வோம், என்றோ ஓர் ஒளிமயமான விடியல் எனக்காகவும்உங்களுக்காகவுமே இருக்கும். 110 [சகோதரன் பிரான்ஹாம் “என்றோ ஓர் ஒளிமயமான விடியல்” என்னும் பாடலை வாய்திறவாமல் மௌனமாகப் பாடத் துவங்குகிறார்—ஆசி.] இப்பொழுது உங்களுடையக் கரங்களை உயர்த்தின நீங்கள், உங்களுக்கான என்னுடைய ஜெபத்தை நீங்கள் அவ்வளவாக வாஞ்சிப்பீர்களேயானால், தேவன் எனக்கு செவிக்கொடுப்பார் என்று விசுவாசிப்பீர்களேயானால், நீங்கள் இங்கே பீடத்தண்டை நடந்துவர விரும்பினால், அப்பொழுது நான் இங்கு நின்று உங்களோடு ஒரு சிறு ஜெபம் செய்யட்டும். பீடமோ திறந்திருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. அது சரி. புருஷரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எழும்பி நின்று மேலே வாருங்கள். தேவன் உதவி செய்வார் என்றும், ஜெபத்திற்குச் செவிக்கொடுப்பார் என்றும் நீங்கள் விசுவாசித்தால், அவரை அறிந்துகொள்ள அவரண்டை வருவதன் மூலம் நான் உங்களுக்கு உதவி செய்ய இப்பொழுதே நடந்து வாருங்கள். நீங்கள் வரமாட்டீர்களா? என்றோ ஓர் ஒளிமயமான விடியல், இயேசு… 111 அது காலையில் இருக்காது என்று எப்படி நாம் அறிந்துகொள்வோம்? “யுத்தம்…” இப்பொழுது நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிற அந்த யுத்தம், இப்பொழுது நீங்கள் அதில் ஜெயமடைந்துவிடமாட்டீர்களா? நீங்கள் ஜெயத்தை ஆர்ப்பரிக்கும்படியாய் அது இப்பொழுது ஜெயமாகக்கடவது. என்றோ ஓர் ஒளிமயமான விடியல் எனக்காகவும் உங்களுக்காகவுமே. என்றோ ஓர் ஒளிமயமான விடியலில், இயேசு… 112 அப்படியே எழும்புங்கள், சரி, உங்களுடைய வழியை சரி செய்து கொள்ளுங்கள். …எல்லா யுத்தங்களும் ஜெயமடையும், நாம் ஜெயத்தை ஆர்ப்பரித்து நீலவானத்தினூடாகச் செல்வோம், என்றோ ஓர் ஒளிமயமான நாளில்… 113 நாங்கள் காத்துக்கொண்டிருக்கையில், இப்பொழுதே நீங்கள் வரமாட்டீர்களா? நாங்கள் இங்கே உங்களுக்கு ஜெபத்தில் உதவி செய்வோம். விசுவாசமுள்ள ஜெபம் நமக்காக ஏராளமானவற்றைச் செய்கிறது. நீங்கள் வரமாட்டீர்களா? நீங்கள் நிகழ்காலத்தின் தேவனை ஏற்றுக் கொள்ள வரும்படிக்கு நான் உங்களைச் சம்மதிக்கச் செய்து கொண்டிருக்கிறேன். வெறுமெனே ஏதோ ஒரு—ஒரு தேவனை என்றல்ல, அதாவது நீங்கள் ஒரு சபைக்குப் போய், “நல்லது, நான் சபையைச் சேர்ந்து கொண்டேன்” என்றல்ல. அந்தத் தேவன் கிரியைச் செய்யமாட்டார். ஒரு மெத்தோடிஸ்டு தேவன், ஒரு பாப்டிஸ்டு தேவன், ஒரு பிரஸ்பிடேரியன் தேவன், ஒரு பெந்தேகோஸ்தே தேவன், அவைகள் கிரியைச் செய்யாது. இந்த வேதாகமத்தின் தேவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு ஸ்தாபன பெந்தேகோஸ்தேத் தேவன் வெளியே உலகத்திற்குச் செல்வார்; ஒரு மெத்தோடிஸ்டு தேவன் அல்லது ஒரு பாப்டிஸ்டு தேவன் அல்லது வேறெந்த ஸ்தாபன தேவனானாலும் சரி. ஆனால் இந்த வேதாகமத்தின் தேவனே உங்களை இயேசுவைப் போலாக்குவார். அவர் நிச்சயமாக ஆக்குவார். அவருடைய ஆவி உங்களுக்குள் வாசம் செய்யும், உங்களுடைய முழு ஜீவியமும் மாற்றப்படும்; அந்தக் கோபம், அந்தத் துர்குணம், அந்த மன்னியாத ஆவி, அந்தக் காரியம் உங்களுடைய ஆத்துமாவை ஒரு நித்திய இழப்பிற்குள்ளாக அரித்தழிக்கும். 114 நான் இப்பொழுது ஒரு வலையை வீசிக் கொண்டிருக்கிறேன். அது உங்களைப் பொருத்ததாயிருக்கிறது. அதற்குள்ளாகப் பின்தொடருங்கள், நீங்கள் தொடரமாட்டீர்களா? இங்கேச் சரியாகப் பீடத்தைச் சுற்றி நகர்ந்து வாருங்கள். அங்கேப் பின்னால் உள்ள உங்களில் அநேகர் உங்களுடையக் கரங்களை உயர்த்தினீர்கள். ஜனங்கள் நீங்கள் எழுந்து அவர்களுடைய இருக்கைகளை சுற்றிவரும்படிக்கு வழிவிடுவார்கள். வாலிப மனிதனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. 115 இப்பொழுது அவள் மென்மையாய் இசையை இசைத்துக்கொண்டிருக்கையில், சிலர் இங்கே பீடத்தைச் சுற்றி நிற்கிறீர்கள். ஏழு ஆத்துமாக்கள் பீடத்தைச் சுற்றி நிற்க இங்கே முன்னோக்கி வந்துள்ளன. ஏழு என்பது தேவனுக்கு ஒரு பரிபூரண எண், பரிபூரணம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதுதான் இங்கே நின்றுகொண்டிருக்கிற ஒரு நபரின் மீது வந்திருக்கிறார். சகோதரனே, அதனால்தான் நான் பரிசுத்த ஆவியை அழைக்கிறேன். 116 இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்காகவும் அவர் இங்கே இருக்கிறார். உங்களுடைய இருதயங்களில் தாழ்மையாயிருங்கள். இதுவே நீங்கள் கடைசி முறையாகப் பீடத்தைச் சுற்றி நிற்கப்போவதாயிருந்தால், இப்பொழுது நீங்கள் கூறப்போகிற இதுவே கடைசி ஜெபமானால் என்னவாகும்? இயேசு வரப்போகிறார். அவர் காலைக்கு முன்னரே உங்களுடைய வாசலைத் தட்டலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் எல்லாவற்றிற்க்குமான ஒரு தேவனாயிருந்தால், என்றோ ஒரு நாள் நீங்கள் போகத்தான் வேண்டும், அவர் சரித்திரப்பிரகாரமான ஒரு தேவனாயுமாயிருக்கிறார், அவர் இன்றைக்கான ஒரு தேவனாயுமிருக்கிறார். 117 அவர் உங்களிடத்தில் பேசினார். நீங்கள் அவரைச் சந்திக்க அவருக்கு முன்பாக இங்கே எழும்பியிருக்கிறீர்கள். நீங்கள் அவரைச் சந்திக்க முன்னோக்கி வந்திருக்கிறீர்கள். அவர் உங்களைச் சந்திப்பார். அவர் இப்பொழுது இங்கே நின்று கொண்டிருக்கிறார். அப்படியே உங்களுடைய இருதயத்தில் நீங்கள் செய்திருக்கிற எல்லாத் தவறுகளையும் அறிக்கை செய்யுங்கள். அதாவது, “தேவனே, ஒரு பாவியாகிய என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் தவறு செய்திருக்கிறேன். நான் தவறாயிருக்கிறேன் என்று நான் என் முழு இருதயத்தோடு இப்பொழுதே நான்—நான் அறிக்கையிடுகிறேன். நீர் என்னிடத்தில் இரக்கமாயிருந்து, என்னுடையப் பாவங்களை எனக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான்—நான் எஞ்சியுள்ள என்னுடைய நாட்களிளெல்லாம் உம்மையே சேவிப்பேன். என்னுடைய இருதயத்தில் எரிந்துகொண்டிருக்கிற இந்தச் சிறிய அக்கினியானது, சிறிய விசுவாசமானது, அதுவே இன்றிரவு என்னை இந்தப் பீடத்தண்டை இங்கே வரும்படிச் செய்தது. அது அப்படியே என்னுடைய ஆத்துமாவில் ஆழமாய்ப் பற்றிகொள்வதாக. அது இப்பொழுதே இங்கேப் பற்றிப் பிடித்துக் கொள்வதாக. எரிகிற ஏதோ ஒன்று, ‘ஆம், இயேசுவே நீர் ஜீவிக்கிறீர்’ என்று என்னிடத்தில் கூறுகிறதே. நான் உம்மை நேசிக்கிறேன். இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் நீர் காட்சியில் தோன்றிக் காரியங்களை, மகத்தானக் காரியங்களைச் செய்கிறதை நான் காணப்போகிறேன். நீர் என்னுடைய இருதயத்தில் பேசினபோது நான் முன்னோக்கி வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீர் புற்றுநோயை ஜனங்களை விட்டுப்போகச் செய்யப் போகிறதையும், வியாதியஸ்தரையும், தேவையுள்ளோரையும் சுகப்படுத்தப் போகிறதையும் நான் காணப்போகிறேன்” என்று கூறுங்கள். அவர்கள் திரும்பி வந்து, தேவன் அவர்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதைச் சாட்சிப் பகரக் கேட்பார்களாக; சரித்திரத்தின் தேவன், சரித்திரத்திலிருந்து வெளியே எழும்பியிருக்கிறத் தேவன் இன்றைக்கும் மாறாதவராய் இருந்துகொண்டு, காட்சியில் வந்துள்ளார். ஏனென்றால் அவர் இந்த நேரத்தில் தரித்திருக்கும்படி வருகிறார்; அவருடைய இரண்டாம் வருகை. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. நீங்கள் ஒவ்வொருவரும் என்னோடு ஜெபம் செய்யுங்கள். 118 அன்புள்ள தேவனே, இந்த ஏழு பேரையும் இப்பொழுதே நான் உமக்கு முன்பாகக் கொண்டு வருகிறேன். முதல் இரவே ஏழு அதிசய நட்சத்திரங்கள் முன்கொணர்ந்து ஒப்புவிக்கப்பட்டன. நீர் உம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தையில், “என் பிதா ஒருவனை முதலில் இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பேத் தள்ளுவதில்லை. ஆனால் நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் அவனை எழுப்புவேன்” என்றுக் கூறியிருக்கிறீர். கர்த்தாவே, அது உம்முடைய வாக்குத்தத்தமாயுள்ளது. உணர்ச்சி வேகத்தினால், குற்றவாளியென்ற ஒப்புதலின் செய்கையினால் இந்த ஏழு விலையேறப்பெற்ற அதிசய ஆத்துமாக்கள் இன்றிரவு முன்னோக்கி வந்திருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் தீர்க்கதரிசிகளிடத்தில் பேசினத் தேவன், குருடான மனிதனிடத்தில் பேசினத் தேவன் இன்றைக்கும் இன்னமும் ஜீவிக்கிறார் என்று அவரை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் அவரைச் சந்திக்க முன்னோக்கி வந்துள்ளனர். 119 வாக்குத்தத்தம் பண்ணின அந்த மாறாத தேவன், குஷ்டரோகியை அவனுடையச் சொந்த பாளையத்திலேயே சந்தித்தவர், ஆற்றங்கரையிலே உதிரப்போக்கோடிருந்த ஸ்திரீயை சந்தித்தவர், மரணத்தை லாசருவின் கல்லறையில் சந்தித்து, அவனை மீண்டும் ஜீவிக்கும்படிச் செய்தவர் இன்றிரவும் மாறாத தேவனாய், இந்த ஆவிக்குரிய மரணத்தைச் சந்திக்கும்படி இங்கே நின்று இவர்களையும் ஜீவிக்கும்படியாய் செய்கிறீர். அதாவது, “என்னுடைய ஆவியின் நயமான வேண்டுதலின் பேரில் என்னிடத்தில் அறிக்கை செய்ய வந்திருக்கிற இவர்களிடத்திலிருந்து உன்னுடையக் கரங்களை எடு. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பேன், எந்த மனிதனும் அவர்களை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடியாதே. நான் அவர்களைக் கடைசி நாளில் எழுப்புவேன்”, என்று கூறுவீராக. 120 பிதாவே, நாங்கள் அவர்களுக்காக உமக்கு நன்றிக் கூறுகிறோம். மரணமானது அவர்களை விடுவிக்கும் வரையில் அவர்கள் உம்முடையக் கரங்களில் விசுவாசமுள்ளவர்களாய்த் தரித்திருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அந்த மகத்தான நாளில் அவர்கள் ஆகாயத்திற்கு அப்பால் கலியாண விருந்து அமைக்கப்படும்போது, இராஜாவானவர் வந்து, “1958-ம் வருடம் அக்டோபர் மாதம் முதலாம் தேதி அந்தச் சிறுத் தளமிடப்பட்ட கூடாரத்தில் நினைவிருக்கிறதா? நீ நடந்து வந்து என்னை உன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டாயே. நான் உன்னிடத்தில் பேசினேனே. அப்பொழுது நீ ஒரு பாவியாயிருந்தாய், ஆனால் இப்பொழுதோ நான் உன்னை இரட்சித்துவிட்டேன். இப்பொழுது நீ என்னுடையவன். நீ நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறாய். உலகத்தோற்ற முதல் நான் உனக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற சந்தோஷத்திற்குள் இப்பொழுதேப் பிரவேசி” என்று கூறுவாரே. கர்த்தாவே, இதை அருளும். இப்பொழுது அவர்கள் உம்முடையவர்களாய் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மண்டை ஒப்புவிக்கிறோம். ஆமென். இப்பொழுது கூட்டத்தாரே, உங்களுடையத் தலைகள் வணங்கி இருப்பதோடு இருக்கட்டும். 121 நான் இங்கே பீடத்தண்டையிலே இருக்கிற உங்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்ளப்போகிறேன். இப்பொழுது நீங்கள் உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்திலிருந்து, அந்தச் சிறு விசுவாச ஜூவாலையானது நீங்கள் இங்கே பீடத்தண்டை முன்னோக்கி வரும்படியாகவும், இப்பொழுது நீங்கள் புரிந்துள்ள இந்தச் செயலைச் செய்யும்படிக்கு உங்களிடத்தில் கூறினதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களுடையக் கரங்களை உயர்த்தினப் பிறகு, முன்னோக்கி நடந்து வருகிறதையும், அந்தச் சிறு ஜூவாலையானது உங்களுடைய இருதயத்தில் உள்ள ஓர் உண்மையான ஜீவனுள்ள விசுவாசத்தை நோக்கி எரியத்துவங்கியிருக்கிறது என்று நீங்கள் அதை உணருகிறீர்களா? இயேசு உங்களுடையப் பாவங்களை மன்னித்திருக்கிறார் என்றும், நீங்கள் இப்பொழுதிலிருந்து அவருடையவராயிருக்கப் போகிறீர்கள் என்றும் இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் உங்களுடைய வலது கரத்தை அவரண்டை உயர்த்துவீர்களா? இயேசு உங்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்திருக்கிறார் என்பது போன்று நீங்கள் உணருவீர்களேயானால், பீடத்தைச் சுற்றியுள்ளவர்கள், நீங்கள் உங்களுடைய வலது கரத்தை உயர்த்துங்கள். சுற்றிலுமுள்ளவர்கள்…இப்பொழுது, இரண்டு, மூன்று கரங்கள், மேலே அல்ல. இப்பொழுது அப்படியே ஒவ்வொருவரும் தொடர்ந்து ஜெபியுங்கள்.